|
கண
கண்களையுடையவர்கள் என்னுதல்.
மங்கைமார் - 1அவனுக்குத் தன்னேராயிரம் பிள்ளைகளைப்போலே இவளுக்குத் தன்
பருவத்தில் தோழிமார் உண்டாயிருக்கிறபடி. 2முக்தர் இருபத்தைந்து வயதினர்களாய்
இருக்குமாறு போலே இவர்களும் எப்பொழுதும் மங்கைப் பருவத்தினராய் இருத்தலைத் தெரிவித்தபடி.
மங்கைமார் முன்பு - 3பின்பு இருக்க ஒட்டார்களே! 4ஒருவர் இருவர் அன்றே.
எல்லாரும் தனித்தனியே ‘என்முன்பே, என்முன்பே’ என்பர்களே. 5“மஹாத்மாவான அநுமாரை
மற்றை வாநரோத்தமர்கள் சூழ்ந்துகொண்டு நின்றார்கள்” என்கிறபடியே, ஓலக்கமாக இருந்து திருவடியைக்
கொண்டாடினாற்போலே. மஹாத்மாநம் - நான்குபேர் சூழ இருந்து கொண்டாடினார்கள் என்கிற இதுதான்
தரமோ இவனுக்கு? 6உபாயநாநி உபாதாய மூலாநிச பலாநிச-என்று கனி கிழங்கு முதலானவற்றைக்
கொடுத்துப் பெருமைப் படுத்தினார்கள் அல்லவோ முதலிகள். அப்படியே, நெய்யமர் இன்னடிசில் என்று
இங்கும் எல்லாம் உண்டாயிருக்கிறபடி. 7“பேஜிரே விபுலாநநா - பருத்த முகமுள்ளவர்களானார்கள்”
உண்டே அன்றோ அங்கு; இங்கும் மை அமர் வாள் நெடும் கண் எல்லார்க்கும் உண்டாயிருக்கிறபடி.
1. “மங்கைமார்” என்ற பன்மைக்கு,
பாவம் அருளிச்செய்கிறார் ‘அவனுக்கு’
என்று தொடங்கி. இங்கே, இறையனார் களவியல் சூத். 2.
உரை பார்த்தல்
தகும். (பக். 351.)
2. “மங்கை” என்று,
பருவப்பெயரால் சொன்னதற்கு, பாவம் அருளிச்செய்கிறார்
‘முக்தர்’ என்று தொடங்கி.
3. “முன்பு” என்றதற்கு, பாவம்
அருளிச்செய்கிறார் ‘பின்பு இருக்க
ஒட்டார்களே’ என்று.
4. “மங்கைமார் முன்பு” என்று
கூட்டி, பாவம் அருளிச்செய்கிறார் ‘ஒருவர்’
என்று தொடங்கி.
5. இப்படிக் கொண்டாடின பேர்
உளரோ? என்ன, ‘உளர்’ என்று கூறத்
திருவுள்ளம்பற்றி அதற்குப் பிரமாணம் காட்டுகிறார் ‘மஹாத்மாவான’
என்று தொடங்கி.
“தத: தே ப்ரீ தமநஸ:
ஸர்வே வாநர புங்கவா:
ஹனூமந்தம் மஹாத்மாநம்
பரிவார்ய உபதஸ்திரே”
என்பது, ஸ்ரீராமா. சுந். 57 : 31.
சுலோகத்தில், “மஹாத்மாநம்” என்றதற்கு,
விசேடவுரை அருளிச்செய்கிறார் ‘நான்குபேர்’ என்று தொடங்கி.
6. “உபாயநாநி உபாதாய மூலாநி
ச பலாநி ச
ப்ரத்யர்சயந் ஹரிஸ்ரேஷ்டம்
ஹரயோ மாருதாத்மஜம்”
என்பது, ஸ்ரீராமா. சுந். 57 : 33.
7. “தத: அங்கதம் ஹனூமந்தம்
ஜாம்பவந்தம் ச வாநரா:
பரிவார்ய ப்ரமுதிதா பேஜிரே
விபுலாநநா:”
என்பது, ஸ்ரீராமா. சுந். 57
: 47.
|