|
அவன
அவன் அணையவேண்டும்படியான
காதல் என்னுதல். 1“துக்கத்தால் அதிகமாக இளைத்திருக்கிற அவயங்களால் நன்றாகத்
தொடும்படி” என்னக்கடவதன்றோ. 2‘நம் சத்தை கிடக்கக் கிடக்கும் அன்றோ’ என்றாதல்,
‘குணஞானத்தாலே தரித்திருக்கிறாள்’ என்றாதல் நினைத்திருக்குமது அல்ல என்று சொல்லுங்கோள்.
3அங்ஙனேயும் தரித்திருந்தார் உண்டே யன்றோ; மாயா சிரசைக் காட்டின அன்றும்,
பிராட்டி, உலகத்தாரோடு ஒக்கக் கண்ணநீர் விழவிட்டு, ‘அதுவேயானாலும் அவர் உளராகில் அல்லது
நம்சத்தை கிடவாது’ என்று தன்னைக் கொண்டு அறுதியிட்டுத் தரித்திருந்தாள் அன்றோ. 4“சூரியனிடத்துள்ள
ஒளியைப்போன்று, நான் இராகவனை விட்டு நீங்கேன்” என்றாள் அன்றோ. சூரியன் உண்டாகில் அல்லது
ஒளியும் இல்லை அன்றோ. 5இங்ஙனே இருக்கச் செய்தே சில காரணங்களாலே வரும் கூடுதல்
பிரிதல்களே அல்லவோ உள்ளன. 6திரிவியமாயிருக்கச் செய்தேயும் பிரகாரமாகின்ற
தன்மை உண்டே;
1. “மெய்யமர் காதல்” என்பதற்கு
அருளிச்செய்த இருவகைப் பொருள்களுள்
இரண்டாவது பொருளுக்குப் பிரமாணம் காட்டுகிறார் ‘துக்கத்தால்’
என்று
தொடங்கி. இப்பொருளையுடைய சுலோகத்தை மேலே காண்க.
2. மேலே கூறிய இருவகைப்
பொருள்களாலும் பலித்த பொருளை
அருளிச்செய்கிறார் ‘நம் சத்தை’ என்று தொடங்கி. இங்கே, பக்.
78. 5-ஆம்
பத். குறிப்புப் பார்க்கவும்.
3. அவன்சத்தை கிடக்கத்
தரித்திருந்த பேர் உளரோ? என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார் ‘அங்ஙனேயும்’ என்று தொடங்கி.
‘அதுவேயானாலும்’
என்றது, அந்தத் தலையேயானாலும் என்றபடி.
4. அப்படி அவன் உண்டானபோது
உண்டாய், அவன் இல்லையான போது
இல்லையாம்படியாதற்குப் பிரிக்கப்படாதவளோ! என்ன, அதற்கு
விடை
அருளிச்செய்கிறார் ‘சூரியனிடத்துள்ள’ என்று தொடங்கி.
“ஸக்யா லோபயிதும் ந
அஹம் ஐஸ்வர்யேண தநேந வா
அநந்யா ராகவேண அஹம்
பாஸ்கரேண ப்ரபா யதா”
என்பது ஸ்ரீராமா. சுந். 21. 15.
“பாஸ்கரேண ப்ரபாயதா” என்றதனால் பலித்த
பொருளை அருளிச்செய்கிறார் ‘சூரியன் உண்டாகில்
அல்லது’ என்று
தொடங்கி.
5. ஒளிபோன்று பிரிக்கமுடியாமல்
இருப்பவளுக்குப் பிரிவு வரக்கூடுமோ?
என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘இங்ஙனே இருக்கச்செய்தே’
என்று தொடங்கி. என்றது, பிரியாதவளாக இருப்பினும் தேவ மாதர்கள்
சிறையை விடுவிக்கைக்காக
அவதாரத்தில் மெய்ப்பாட்டாலே பிரிவாகத்
தோற்றின இத்தனை; பொருளின் உண்மையை நோக்குமிடத்துப்
பிரிவு
இல்லை என்றபடி.
6. சாதி குணங்களுக்கு
ஒழிய, பொருளுக்கு, பிரியாத என்ற விசேடணம்
கூடுமோ? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
‘திரவிய மாயிருக்கச்
செய்தேயும்’ என்று தொடங்கி. ஆக, இத்துணையும் அவன் சத்தை கிடக்கக்
கிடக்கும் என்றதனை விரிவாக எடுத்துக்கூறி, பிராட்டி
|