|
ம
மான அழகினைக் காட்டுவது
முறுவலைக் காட்டுவதாய் என்னைத் தனக்கே உரிமை ஆக்கினவன். 1பிரிந்துபோகிறபோது
‘இவள் சத்தை கிடக்கவேணும்’ என்று நினைத்துச் செய்த புன்முறுவலுக்காயிற்று இவள் தோற்றது. என்
கனிவாய் - 2திருவாழிக்கு முற்றூட்டு ஆயிற்றுத் திருக்கை; தமக்கு முற்றூட்டு திருப்பவளம்.
3அவன் ஜீவனத்தை நித்யமாக்கினான், என் ஜீவனத்தைக் காதா சித்கமாக்கினான்.
4அவனுக்கே கையடைப்பு ஆயிற்றே. கைமேலே இடுமே. 5கண்டு - எனக்குப்
போலே நினைப்பிற்கு விஷயமாமளவு அன்றே உங்களுக்கு. அன்றிக்கே, இவற்றைக் கண்களாலே காணுதல்
என்னுதல். அன்றிக்கே, இவற்றைக்காணுதல் அன்றோ இவளுக்கு என்னுதல்; 6தொட்டாரைத்
தொடுதல், கண்டாரைக் காணுதல் அன்றோ இவளுக்கு.
மெய் அமர் காதல்
சொல்லி-அவன் திருமேனியிலே நான் அணையவேண்டும்படியான காதல் என்னுதல்; என்னுடம்போடே
1. “என்” என்றதனை,
“கனிவாய்” என்றதனோடு கூட்டி, பாவம்
அருளிச்செய்கிறார் ‘பிரிந்து போகிறபோது’ என்று தொடங்கி.
2. “கையமர் சக்கரம், என்கனிவாய்”
என்று விசேடிக்கிறவளுடைய
மனோபாவத்தை அருளிச்செய்கிறார் ‘திருவாழிக்கு’ என்று தொடங்கி.
முற்றூட்டு - பூர்ண அநுபவம்; முழுவதும் உண்ணல்.
3. “அமர் சக்கரம்” என்ற
வினைத்தொகையைக் கடாக்ஷித்து, “என்”
என்கிறவளுடைய மனோபாவத்தை அருளிச்செய்கிறார் ‘அவன்
ஜீவனத்தை’ என்று தொடங்கி, அவன் - சக்கரத்தாழ்வான். காதாசித்கம்
- ஒரு காலத்தில் கிடைப்பது.
4. “கையமர்” என்றதனைத்
திருவுள்ளம்பற்றி ரசோக்தியாக
அருளிச்செய்கிறார் ‘அவனுக்கே’ என்று தொடங்கி.
‘கையடைப்பாயிற்றே’
என்பதற்கு, முற்றூட்டு ஆக்கினான் என்பது நேர்பொருள். கையிலே
அடைக்கப்பட்டது
என்பது வேறும் ஒருபொருள்.
5. “கண்டு” என்பதற்கு, மூன்று
விதமாகப் பொருள் அருளிச்செய்கிறார்.
‘இவற்றின் கண்களாலே காணுதல்’ என்றது, இவை இங்கு நின்றும்
சென்று
அவனைக் கண்டால் தான் கண்டது போன்று இருக்கும் என்றபடி.
‘இவற்றைக் காணுதல்’ என்றது,
அவனைக் கண்ட இவற்றைக் காணுதல்
என்றபடி.
6. இரண்டாவது வகையாக
அருளிச்செய்த பொருளுக்குப் பிரமாணம்
காட்டுகிறார் ‘தொட்டாரை’ என்று தொடங்கி.
“வாஹி வாத யத: காந்தா
தாம் ஸ்ப்ருஷ்ட்வா மாமபி ஸ்ப்ருஸ
த்வயி மே காத்ர ஸம்ஸ்பர்ச:
சந்த்ரே த்ருஷ்டி ஸமாகம:”
என்பது, ஸ்ரீராமா. யுத். 5
: 9. என்றது, பிராட்டியினுடைய ஸ்பரிசம் காற்று
மூலமாக ஸத்வாரகமானாற்போலே, காட்சியும் ஸத்வாரகம்
என்றபடி.
|