பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
361

உண

உண்டோ?’ என்று கைவாங்குமதன்று; அவர்கள் விரும்பினவற்றையே தேடி இடவேணும் என்னும் விசேடப் பொருளைத் தெரிவித்தபடி. 1“எந்தப் புருஷன் எதனை அன்னமாக உடையவனாயிருக்கிறானோ அவனுடைய தெய்வமும் அதனையே அன்னமாக வுடைத்தாயிருக்கிறது” என்னலாவது அவன் பக்கல். நிச்சல் - சேர்ப்பது ஒருநாளே, இவர்களுக்குப் பின்பு அநுபவம் நித்தியமாயிருக்கிறபடி. 2“எந்த நாதமுனிகளுடைய இரண்டு திருவடிகள் இம்மை மறுமை என்னும் இரண்டு உலகங்களிலும் எப்போதும் என்னைக் காப்பாற்றும் பொருள்களோ” என்னுமாறு போலே. கை அமர் சக்கரத்து என் கனிவாய்ப் பெருமானைக்கண்டு - 3உண்டாரை உண்ணுவிக்கத் தேடுகிறாள் அன்றோ. 4இதனால் என் சொல்லியவாறோ? எனின், இவர்க்கு முன்னே இவர் விரும்பிய பொருள், இவரைப் பற்றினார்க்கு முற்பட்டிருக்கிறபடியைத் தெரிவித்தபடி. 5“வேறாக ஏத்தி இருப்பாரை வெல்லுமே மற்றவரைச் சார்த்தி இருப்பார் தவம்.” எப்போதும் கை கழலா நேமியானாய் இருத்தலின் ‘கையமர் சக்கரம்’ என்கிறது. என் சக்கரத்து கனிவாய்-6கையும் திருவாழியு

 

1. மக்கள் எதனை உண்ணுகிறார்களோ அதனையே தேவர்களும்
  உண்ணுகிறார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறதே? என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார் ‘எந்தப் புருஷன்’ என்று தொடங்கி.

  “இதம் புங்க்ஷ்வ மஹாராஜ ப்ரீதோ யதஸநாவயம்
   யதந்ந: புருஷோ பவதி ததந்நா: தஸ்ய தேவதா:”

  என்பது, ஸ்ரீராமா. அயோத். 103 : 30.

2. அநுபவம் நித்தியமாய் இருக்கைக்குக் காரணம், இவளுடைய
  செய்ந்நன்றியறிதல், இவ்வுலகோடு அவ்வுலகோடு வாசிஅற எப்போதும்
  உண்டு ஆகையாலே என்கிறார் ‘எந்த நாதமுனிகளுடைய’ என்று
  தொடங்கி.

  “நாதாய நாதமுநயே அத்ரபரத்ர சாபி
   நித்யம் யதீய சரணௌ ஸரணம் மதீயம்”

  என்பது, தோத்திர ரத்தினம், 2.

3. “கண்டு” என்ற பதத்தோடு “நெய்யமர் இன்னடிசில்” என்றதனையும்
  கூட்டி, அதனால் பலித்த பொருளை அருளிச்செய்கிறார் ‘உண்டாரை’
  என்று தொடங்கி. கண்டபோதே திருப்தி பிறக்கையாலே ‘உண்டாரை’
  என்கிறார்.

4. “கண்டு” என்றதற்குச் சுவாபதேசப் பொருள் அருளிச்செய்கிறார்
  ‘இதனால்’ என்று தொடங்கி.

5. அதற்குப் பிரமாணம் காட்டுகிறார் ‘வேறாக’ என்று தொடங்கி. இது,
  நான்முகன் திருவந். 18.

6. “என்” என்றதனை, சக்கரத்தோடும் கனிவாயோடும் கூட்டி, பாவம்
  அருளிச்செய்கிறார் ‘கையும் திருவாழியுமான’ என்று தொடங்கி.