பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
360

காதல் சொல்லி, கிளிகாள்! விரைந்து ஓடிவந்து, என்கை இருந்து நெய்யமர் இன்னடிசில் நிச்சல் பாலொடு மேவீரோ! என்கிறாள். 1அது என்? போகிறபோதே லாலநம் பண்ணிவிட்டாலோ? என்னில், 2அதற்குக் கைம்முதல் உண்டாகவேணுமே? “துக்கத்தால் மிக இளைத்திருக்கிற அவயவங்கள்” என்றும், “இட்டகால் இட்டகையளாயிருக்கும்” என்றும் அன்றோ இவள் கிடக்கிறது. இனித்தான் கொண்டாடுகைக்கு ஓலக்கம் இருப்பாரும் வேணுமே! “எம்மின்முன் அவனுக்கு மாய்வராலோ” என்றே அன்றோ அவர்களும் கிடக்கிறது.

    நெய் அமர் இன் அடிசில் நிச்சல் பாலொடு மேவீரோ - 3“இந்த உடலின் சேர்க்கை எல்லாப் பொருளுமாம்” என்று கொடுக்கைக்கு உடல் இல்லையே இவளுக்கு. நெய்யோடே கூடின இனிய அடிசிலை நாள்தோறும் பாலோடேகூட நான் தர, அதனை உண்டு நீங்கள் என்னை உஜ்ஜீவிப்பிக்கவேணும். 4“உண்ணும்சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன்” என்று இருக்கக்கூடிய இவள், இவை உகப்பது தேடி இடுகிறாள் அன்றோ. 5இதனால், என் சொல்லியவாறோ? எனின், பகவத்விஷயத்தில் உபகாரபரராயிருப்பார்க்கு, ‘உண்பதில் ஒருகை பகுந்திட்டோமாகில் செய்யலாவது

 

1. இனி, மேலே சொல்லப்படும் பொருளில் சங்கையை அநுவாதம் செய்கிறார்
  ‘அது என்?’ என்று தொடங்கி. லாலனம் பண்ணுதல் - பாராட்டுதல்.

2. இவள் “இட்ட கால் இட்ட கை” என்னும்படி தளர்ந்திருக்கையாலே,
  அவற்றிற்கு இருப்பிடமாக்கச் சக்தி இல்லை என்னுமிடத்தை ரசோக்தியாக
  அருளிச்செய்கிறார் ‘அதற்குக் கைம்முதல்’ என்று தொடங்கி.

  “யதா தம் புருஷவ்யாக்ரம் காத்ரை: சோகாபிகர்சிதை:”

  என்பது, ஸ்ரீராமா. சுந். 40 : 3.

  “இட்டகால்” என்பது, திருவாய். 7. 2 : 4.

  “எம்மின்முன்” என்பது, திருவாய். 9. 9 : 5. அவர்களும் - தோழிமார்களும்.

3. நாயகனைப் போன்று சரீரத்தைக் கொடாமல் நெய்யமர் இன்னடிசில்
  முதலானவற்றைக் கொடுப்பான் என்? என்ன, ‘இந்த உடலின்’ என்று
  தொடங்கி அதற்குவிடை அருளிச்செய்கிறார். “ஏஷ ஸர்வஸ்வ பூதஸ்து”
  என்பது, ஸ்ரீராமா. சுந். 4. 5 : 6. என்றது, அவன் ஸ்வதந்திரனாகையாலே
  கொடுத்தான்; இவள் பரதந்திரப்பட்டவள் ஆகையாலே நாயகனுக்கு ஒழியப்
  பிறர்க்குச் சரீரத்தைக் கொடுக்கப் போகாதே அன்றோ என்றபடி.

4. தாரக போஷக போக்கியங்கள் எல்லாம் அவன் என்று இருக்குமவள்
  இப்படிச் சொல்லக்கூடுமோ? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
  ‘உண்ணும் சோறு’ என்று தொடங்கி.

5. இதற்குச் சுவாபதேசப்பொருள் அருளிச்செய்கிறார் ‘இதனால் என்
  சொல்லியவாறோ? எனின்,’ என்று தொடங்கி.