|
ப
பாசறவு எய்தி இன்னே
எனை ஊழி வினையேன் நைவேன் - 1‘இன்னம் சிலகாலம் கழிந்தபின்னர் அறிவிக்கிறோம்’
என்னும் அளவாக இருந்ததோ என் நிலை? பாசறவு எய்தி - பாசு என்று பசுமையாய், அதனால் நினைக்கிறது
நீர்மையாய், அது அறுகையாவது, பசலை நிறத்தோடே முடிந்து நிற்றல். இன்னே - ‘எப்படி பசலை நிறத்தை
அடைந்தது?’ என்னில், என்னைக் கண்ட உனக்குச் சொல்ல வேண்டாவே அன்றோ, 2விஷயத்திற்கு
முடிவு இருந்தால் அன்றோ இது அளவுபட்டிருப்பது? இதற்கு ஒரு பாசுரமிட்டுச் சொல்லப்போகாது; உடம்பைக்
காட்டுமித்தனை. பாசுரமிட்டுச் சொல்லப்போகாமையாலே படி எடுத்துக் காட்டுகிறாள், வினையேன் -
பிரிவும் கலவியைப் போன்றதாகப் பெற்றிலேன். என்றது, 3கலவி ஒவ்வொரு காலத்தில்
நிகழ்ந்து கழிவதாக இருக்க, இது எப்பொழுதும் நீடித்து நிற்கிறதே என்றபடி. அன்றிக்கே, வினையேன்-கலக்கப்
பெறாவிட்டால் மீண்டு கை வாங்க ஒண்ணாதபடியான பாவத்தைச் செய்துள்ளேன் என்னலுமாம். எனை ஊழி
நைவேன் - வருத்தத்தோடே எத்தனை கல்பம் சென்றது? முன்பு பிரிந்தார், பதினாலாண்டு ஆதல், பத்துமாதம்
ஆதல். 4ஆசு அறு தூவி வெள்ளைக் குருகே - பழிப்பு அற்ற சிறகையுடைத்தாய், பிறருடைய
துக்கத்தைப் பொறாமைக்கு உறுப்பான மனத்திலே குற்றமற்ற தன்மையுடைத்தாயிருக்கிறபடி. அவன்
பிரிகைக்கு, புறத்தைப்
1. “எனையூழிநைவேன்” என்பதற்கு,
பாவம் அருளிச்செய்கிறார் ‘இன்னம்
சிலகாலம்’ என்று தொடங்கி. என்றது, பசலை நிறத்தை
அடைந்திருக்கையாலே
‘மெள்ளச் செல்கிறோம்’ என்று ஆறி
இருக்கப்போகாது என்றபடி.
2. “இன்னே” என்றதற்கு,
வடிவினைக் காட்டுவதாக மேலே அருளிச்செய்து,
வேறும் ஒருபாவம் அருளிச்செய்கிறார் ‘விஷயத்திற்கு’
என்று தொடங்கி.
‘படி எடுத்துக் காட்டுகிறாள்’ என்றது, ரசோக்தி: ‘சரீரத்தைக் காட்டுகிறாள்’
என்பது நேர்பொருள். ஆபரணங்களின் கூட்டம் என்பது வேறும் ஒரு
பொருள்.
3. ‘கலவி’ என்று தொடங்கும்
வாக்கியத்துக்குக் கருத்து, கலவி பிரிவினை
முடிவாகவுடைத்தாய் இருத்தலைப்போன்று, பிரிவும் கலவியை
முடிவாக
வுடைத்தாயிராதபடியான பாபத்தைச் செய்துள்ளேன் என்றபடி. ‘நீடித்து
நிற்கிறதே’ என்றது,
நீடித்து நிற்கும்படியான பாவத்தைச் செய்துள்ளேன்
என்றபடி.
4.
“ஆசறுதூவி வெள்ளை” என்ற பதங்களால், உள்ளூம் புறம்பும் உள்ள
தூய்மையைச் சொல்லுகிறது. திருஷ்டாந்தத்தோடு
விவரணம் செய்கிறார்
‘அவன் பிரிகைக்கு’ என்று தொடங்கி.
|