| 
New Page 1
 
போலே உள்ளும் கரியன் 
ஆனாற்போலே அன்றோ, நீங்களும் கூட்டுகைக்கு உள்ளும் புறம்பும் நிர்மலமாயிருக்கிறபடி என்பாள்
‘வெள்ளைக்குருகே’ என்கிறாள். 
 
    அருள்செய்து 
ஒருநாள் - ஒருபோது கிருபைசெய்து. 1இவ்வளவில் முகம்காட்டுகையாகிற இதுக்கு மேற்பட 
அருள் இல்லையன்றோ; வெறும் உங்கள் கிருபையாலே செய்தீர்கோள் இத்தனை அன்றோ. மாசு அறு 
நீலம் சுடர்முடி வானவர் கோனைக்கண்டு - பழிப்பு அற்று நெய்த்திருந்துள்ள மயிர் முடியையுடையனாய், 
அம் மயிர்முடியை நித்தியசூரிகள் பேண இருக்கிறவனைக் கண்டு. 2ஒரு நீர்ச்சாவி கிடக்கக் 
கடலிலே மழை பெய்கிறவனைக் கண்டு. ஏசறும் - கிலேசப்படாநின்றாள் என்னுதல்; நாட்டார் ஏசும் 
நிலையைக் கடந்தாள் என்னுதல். அன்றிக்கே, ஏசறுவாய்-வடிவைக் காட்டுவாய் என்னலுமாம். 3என்றது, 
என்னுடைய பசலை நிறத்தை நீ உன்னுடைய உடம்பிலே ஏறிட்டுக் காட்டுவாய் என்றபடி. 
 
    நும்மை அல்லால்
4மறுநோக்கு இலள் - உம்மை ஒழிய வேறு குளிர்ந்த விழி இல்லை. நடந்ததைச் 
சொல்லிக்கொள்ளுவதற்கும், உம்மை ஒழிய வேறு ஒருவரையுடையள் அல்லள். “தோழிமாருடன் சுகமாக 
விருப்பாய்” என்னும் நிலையும் குலைந்தது. அன்றிக்கே, நும்மை அல்லால் - ‘வாரா நின்றோம்’ 
என்று, ஸ்ரீ பரதாழ்வானைப் போலே ஆள் வரவிடத் தரியாது என்னுதல். அன்றிக்கே, சொரூப 
1. அருளுடையார்க்கு அன்றோ 
கிருபைசெய்யும் குணம் உண்டாகும்? அதன் 
  அருளுடைமை இவள் அறிந்தவாறு யாங்ஙனம்? என்ன, அதற்கு 
விடை 
  அருளிச்செய்கிறார் ‘இவ்வளவில்’ என்று தொடங்கி. வெறும் உங்கள் 
  கிருபையாலே அன்றோ முகம் 
காட்டினது? ஆகையாலே, மேலுள்ளதும் 
  கிருபையாலே செய்யவேண்டும் என்பது கருத்து. 
 
2. “வானவர்கோனை” என்பதற்கு, 
வெறுப்பிலே பாவம் அருளிச்செய்கிறார் 
  ‘ஒரு நீர்ச்சாவி கிடக்க’ என்று தொடங்கி. 
 
3. ஏசறுதல்: ஒருசொல். 
வருந்துகிறாள் என்பது பொருள். “ஏசறுதல்” என்பது, 
  துக்கப்படுதலைக் காட்டுமே ஒழிய, வடிவினைக் 
காட்டுவாய் என்னும் 
  பொருளைக் காட்டுமோ? என்ன, ‘என்றது’ என்று தொடங்கி அதற்கு 
  விடை 
அருளிச்செய்கிறார். ‘அதாவது, விரகத்தாலுண்டான பசலைக்கு 
  எல்லை வெளுப்பு ஆகையாலே, உன் உடம்பில் 
வெளுப்பைக் காட்டி, 
  இப்படி இருக்கிறாள் என்று சொல்லுங்கோள்’ என்றபடி. வெள்ளைக் 
  குருகே அன்றோ. 
 
4. 
“மறுநோக்கு இலள்” என்பதற்கு, உம்முடைய கடாக்ஷம் ஒழிய வேறு 
  ஒருவருடைய நோக்கினையுடையவள் அல்லள் 
என்பது பொருள். 
  “மறுநோக்கு இலள்” என்பதற்கு நான்கு வகையாக, பாவம் 
  அருளிச்செய்கிறார். தோழிமார் 
இலரோ? என்ன, அதற்கு விடை 
  அருளிச்செய்கிறார் ‘தோழிமாருடன்’ என்று தொடங்கி. 
 |