| 
New Page 1
 
குணங்களை நினைத்துத் தரித்திருக்கும் 
அளவல்லள் என்னுதல்; அன்றிக்கே, உம்மை ஒழிய, பந்துக்களை நோக்கும் நிலைகழிந்தது என்னுதல். 
இப்பாசுரத்திற்கு முடிபு சென்ற பாசுரத்திலேயாதல், மேல் வரும் பாசுரத்திலே யாதல் கொள்க. தமிழர், 
வினை, எச்சமாய்க் கிடக்கிறது என்று சொல்லுவர்கள். என்றது, ‘மறுநோக்கிலள், பேர்த்து மற்று, 
என்று சொல்லுவாய்’ என்னுமித்தனையும் இட்டுச் சொல்லவேண்டும் என்றபடி. 
(8) 
638 
பேர்த்து மற்றோர் 
களைகண் வினையாட்டியேன் நான் ஒன்றிலேன் 
நீர்த்திரை மேல்உலவி 
இரைதேரும் புதாஇனங்காள்! 
கார்த்திரள் 
மாமுகில்போல் கண்ணன் விண்ணவர்கோனைக்கண்டு 
வார்த்தைகள் கொண்டருளி 
யுரையீர் வைகல் வந்திருந்தே. 
 
    
பொ-ரை :- தீவினையேனாகிய நான் உங்களை ஒழிய வேறே 
ஒப்பற்ற பற்றுக்கோடு ஒன்றனை உடையேன் அல்லேன்; தண்ணீரின் அலைகளின் மேலே சஞ்சரித்து 
இரையைத் தேடுகின்ற பெருநாரைக் கூட்டங்களே! கார்காலத்தில் எழுந்த திரண்ட பெரிய மேகம்போன்ற 
நிறத்தையுடைய கண்ணனாகிய விண்ணவர்கோனைக் கண்டு, அவன் கூறுகின்ற வார்த்தைகளைக் கேட்டு, என் 
பக்கல் கிருபைசெய்து இங்கே வந்திருந்து எப்பொழுதும் சொல்லிக்கொண்டே இருங்கோள். 
 
    வி-கு :- 
வினையாட்டியேன் நான் பேர்த்து மற்று ஓர் களைகண் ஒன்று இல்லேன் என்க. புதா - பெருநாரை. 
அருளி வந்திருந்து வைகல் உரையீர் என்க. 
 
    ஈடு :- ஒன்பதாம்பாட்டு.
1சில புதா இனங்களைக் குறித்து நீங்கள் சென்றால் அவன் வந்திலனாகிலும் அங்குத்தை 
வார்த்தையைக் கொண்டுவந்து என்னை எப்பொழுதும் பிழைப்பிக்க வேண்டும் என்கிறாள். 
 
    பேர்த்து மற்று ஓர் 
களைகண் வினையாட்டியேன் நான் ஒன்று இலேன் - தன் பரிகரங்களிலே ஒன்றைக்கொண்டு 
போதுபோக்குகிறாள் என்னும் நிலையும் குலைந்தது. 2வெறுமையை முன்னிடுமத்தனை அன்றோ 
ததீயர் பக்கலிலும். உங்களை ஒழிய வேறு ஒரு 
1. “வார்த்தைகள் கொண்டருளி 
உரையீர்” என்பது போன்றவைகளைக் 
  கடாக்ஷித்து அவதாரிகை அருளிச்செய்கிறார். 
 
2. சர்வேசுவரன் 
விஷயத்திலே அன்றோ ஆகிஞ்சந்ய அநந்யகதித்வங்கள் 
  வேண்டுவன; ஆசாரியன் பக்கலிலும் வேண்டுமோ? 
என்ன, அதற்கு விடை 
  அருளிச்செய்கிறார் ‘வெறுமையை’ என்று தொடங்கி. 
 |