பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
394

ரக்ஷக

ரக்ஷகரையுடையேன் அல்லேன். பிராட்டிக்கு இலங்கைக்குள்ளே ஒரு திரிசடையாகிலும் இருந்தாள்; காட்டிலே விட்டுப் போந்த தனிமையிலே ஒரு வால்மீகி பகவானாகிலும் இருந்தான்; 1கணவன் பொகட்டால் ஒரு தந்தையாகிலும் உண்டாகவேணுமன்றோ? அங்ஙனம் ஒருவரும் இலர் என்பாள் ‘ஓர் களைகண்’ என்கிறாள். வினையாட்டியேன் - 2நாயகன் தானே ரக்ஷகனாயிருக்குமன்றோ; அப்படிப்பட்டவன் கைவிட்டுப்போம்படியான பாபத்தைச் செய்தேன். நீர்த் திரைமேல் உலவி - 3ஆவரணஜலம், விரஜை இவற்றை எல்லாம் கடந்து ஏறவற்றாயிருக்கை. நிலத்திலே சஞ்சரிப்பதைப் போன்று நீரிலே சஞ்சரிக்கின்றனவாதலின் ‘திரைமேல் உலவி’ என்கிறது. இரைதேரும் - 4இவற்றின் நடையோடு ஒக்க இதுவும் ஒரு பௌஷ்கல்யமன்றோ இவளுக்கு. 5நான் உபவாசத்தினால் இளைத்திருக்க உங்களுக்கு மிடற்றுக்குக் கீழ் இழியாதன்றோ; 6என்னையும் உங்களைப்போலே ஆக்கினாலே அன்றோ ஜீவித்ததாவது. புதா - பெருநாரை.

    கார்த்திரள் மா முகில்போல் கண்ணன் - 7எல்லாவிடாயும் ஆறுங்கண்டீர் அவ் வடிவைக் காணப்பெறில். 8இவள் கண்களுக்குக் கருப்பாயிருக்கிறதன்றோ. கருமையெல்லாம் திரண்

 

1. ‘கணவன் பொகட்டால் ஒரு தந்தையாகிலும் உண்டாக வேணுமன்றோ’
  என்றது, நளனால் நீக்கப்பட்ட தமயந்திக்குத் தந்தை இருந்து
  உதவினமையைத் திருவுள்ளம்பற்றி.

2. பிறரால் நலிவுபடுகிற இடங்களிலே, கணவனால் காப்பாற்றப்படும்
  தன்மையைத் திருவுள்ளம்பற்றி ‘நாயகன்தானே’ என்று தொடங்கி
  அருளிச்செய்கிறார்.

3. பரமபதத்திற்குத் தூதுவிடுகிறாள் ஆகையாலே அருளிச்செய்கிறார்
  ‘ஆவரணஜலம்’ என்று தொடங்கி.

4. இவற்றின் நடையைப்போன்று, இவை இரை தேடுகிறதும் தன்
  காரியத்திற்குச் சாதகம் என்று கொண்டு அருளிச்செய்கிறார் ‘இவற்றின்
  நடையோடு’ என்று தொடங்கி. பௌஷ்கல்யம் - குறைவற்றிருத்தல்.

5. இரைதேடுகிறது தன்காரியத்துக்குச் சாதகமானபடியைக் காட்டுகிறார் ‘நான்
  உபவாசத்தினால்’ என்று தொடங்கி.

6. நாங்கள் இப்போது இரைதேட இல்லையோ? என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார் ‘என்னையும்’ என்று தொடங்கி.

7. இப்போது வடிவினைச் சொல்லுவதற்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘எல்லா
  விடாயும்’ என்று தொடங்கி.

8. வடிவிலே கருமையைச் சொன்னதற்கு, ரசோக்தியாக அருளிச்செய்கிறார்
  ‘இவள் கண்களுக்கு’ என்று தொடங்கி. கருமையாலே குளிர்ச்சியைச்
  சொல்லுகிறது என்பது நேர்பொருள். சகிக்கமுடியாமல் இருக்கிறது என்பது
  மற்றொரு பொருள்.