பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
395

டாற்போலே இருக்கிற மஹாமேகம்போன்ற வடிவையுடையவன். கார்காலத்தில் திரண்ட மஹாமேகம் என்றுமாம். அன்றிக்கே, மாமுகில்-மாறாதே கொடுக்க வல்லமுகில் என்றுமாம். கண்ணன் - 1அவ் வடிவுபோல் அன்று கண்டீர் அகவாயில் தண்ணளி இருக்கும்படி. விண்ணவர்கோனைக் கண்டு 2விடாய்த்தார் இருக்க, மீனுக்குத் தண்ணீர் வார்த்து இருக்கிறவனை. பிரிவதற்குச் சம்பாவனை இல்லாதார்க்குத் தன்னைக்கொடுத்துக் கொடு நிற்கிறவனைக் கண்டு. வார்த்தைகள் கொண்டு - 3வந்திலனாகிலும் சில வார்த்தைகள் சொல்லக்கடவன் அன்றோ. 4காட்சிக்கு மேலே வார்த்தையும் கேட்க அன்றோ நீங்கள் புகுகிறது; 5“பாவி நீ என்று ஒன்று சொல்லாய்” என்னுமவரன்றோ. 6இப்போது இவர்க்கு ‘மாட்டேன்’ என்னும் வார்த்தையும் அமையும். வார்த்தைகேட்கைக்கும் முடியப் போய்த் திரியவோ? என்னில், வார்த்தைகள் கொண்டருளி வந்திருந்து வைகலும் உரையீர் - ஒருகால்போய் அவன் வார்த்தையைக் கேட்டு, என் பக்கலிலே கிருபையைச்செய்து வந்திருந்து, அதனை எனக்கு எப்போதும் சொல்லி என்னை உஜ்ஜீவிப்பியுங்கோள். அன்றிக்கே, விண்ணவர் கோமானான கண்ணனைக் கண்டு வார்த்தைகள் கொண்டு-“மாசுக:” என்று பலத்தோடே முடிவுபெற்றிருக்கிற வார்த்தைகளைக் கொண்டு, என் பக்கலிலே கிருபையைச் செய்து வந்திருந்து வைகலும் உரையீர் என்றுமாம்.

(9)

 

1. “கார்த்திரள்” என்பது போன்றவைகளால் வடிவைக் கூறியதன்பின்,
  “கண்ணன்” என்றதற்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘அவ்வடிவு’ என்று
  தொடங்கி.

2. “விண்ணவர்கோன்” என்பதற்கு வெறுப்பாக, பாவம் அருளிச்செய்கிறார்
  ‘விடாய்த்தார்’ என்று தொடங்கி. அதனை விவரணம் செய்கிறார்
  ‘பிரிவதற்கு’ என்று தொடங்கி.

3. அவனைக்கொண்டு என்னாமல், “வார்த்தைகள் கொண்டு” என்பதற்கு,
  பாவம் அருளிச்செய்கிறார் ‘வந்திலனாகிலும்’ என்று தொடங்கி.

4. “கண்டு” என்றதனோடு “வார்த்தைகள்” என்றதனையும் கூட்டி, பாவம்
  அருளிச்செய்கிறார் ‘காட்சிக்கு மேலே’ என்று தொடங்கி.

5. ‘வருவேன்’ என்பது போன்ற வார்த்தைகள் என்னாமல், வறிதே
  “வார்த்தைகள்” என்கிறது என்? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
  ‘பாவி நீ’ என்று தொடங்கி. இது, திருவாய். 4. 7 : 3.

6. இதனால், பலித்த பொருளை அருளிச்செய்கிறார் ‘இப்போது’ என்று
  தொடங்கி. ‘இப்போது இவர்க்கு மாட்டேன் என்னும் வார்த்தையும்
  அமையும்’ என்றது, அவனைப் பிரிந்து முடியும் நிலையில், “அவர்பக்கல்
  உள்ளது ஒன்று” என்கிறபடியே, தன்சத்தை தரிப்பதற்காக ‘மாட்டேன்’
  என்னும் வார்த்தையும் அமையும் என்றபடி.