பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
403

ஒன

ஒன்பதாந் திருவாய்மொழி - “நீராய்”

முன்னுரை

    ஈடு :- 1“எங்குச் சென்றாகிலும் கண்டு” என்றும், “வானவர் கோனைக் கண்டு” என்றும் தூதுபோகச்சொன்னார்; அவை போக மாட்டாதபடி தம்முடைய துயர ஒலியாலே அழித்தார்; 2“மரங்களும் இரங்கும்வகை” என்று அறிவில் பொருள்கள் இரங்காநின்றால், சிறிது அறிவையுடைய பறவைகள் அழியக் கேட்க வேண்டா அன்றே, 3“ஊற்றின்கண் நுண்மணல்போல் உருகா நிற்பர் நீராய்” என்றது, தூதரை ஒழிய அல்லவே. ஆகையாலே, தம் பக்கத்திலே கால் நடை தந்து போவார் இல்லையே. 4“அறிவில் பொருள்களுங்கூட அழிகிற இடத்தில், பரம சேதனனானவனுக்குச் சொல்லவேணுமோ?” என்று பார்த்து, தம் மிடற்று ஓசையை இட்டு அழைத்துக் கொள்ளப் பார்க்கிறார். 5தம்முடைய துயரத்தைக் காட்டுகின்ற ஓசை கிடக்க, வேறு ஒருவர் போகவேண்டும்படியாய் இருந்ததோ? கலங்காப் பெருநகரமான ஸ்ரீ வைகுண்டத்திலும் தரிக்க ஒண்ணாத படி, கால்குலைந்து வரும்படி பெருமிடறுசெய்து கூப்பிடுகிறார். 7இனித்தான், தூதுபோவார்க்குக் காலாலேயாதல் சிறகாலேயாதல்

 

1. மேல் திருவாய்மொழியில் கூறியவற்றை அநுவதித்துக்கொண்டு இயைபு
  அருளிச்செய்கிறார் ‘எங்குச் சென்றாகிலும்’ என்று தொடங்கி.

2. பறவைகள் ஈடுபடக்கூடுமோ? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
  ‘மரங்களும்’ என்று தொடங்கி. இது, திருவாய். 6. 5 : 9.

3. பறவைகள் இரங்கும் என்கைக்கு, சூசகம் யாது? என்ன, ‘ஊற்றின் கண்’
  என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார். இது, திருவாய்.
  6. 8 : 11.

4. ஆயின், இவர் செய்தது யாது? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
  ‘அறிவில் பொருள்களும்கூட’ என்று தொடங்கி. பரமசேதனன் -
  சர்வேசுவரன்.

5. வியாக்யாதாவின் ஈடுபாடு ‘தம்முடைய’ என்று தொடங்கும் வாக்கியம்.

6. இவருடைய துயர ஒலியின் உறைப்பினை அருளிச்செய்கிறார் ‘கலங்காப்
  பெருநகரமான’ என்று தொடங்கி.

7. கால்நடை தந்து போவார் இல்லாமையாலே கூப்பிடுகிறார் என்றார் மேல்;
  கால்நடை தந்து போவாருளரானாலும் தம் கூப்பீடே அவன் வருவதற்குச்
  சிறந்த சாதனம் என்கிறார் ‘இனித்தான்’ என்று தொடங்கி.