பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
429

New Page 1

    பொ-ரை :- உலகத்திலே சஞ்சரிக்கின்ற கருமங்களாகிற உபாயங்களாய், அந்த உபாயங்களைச் செய்கின்றவர்களுமாய், உலகத்திலேயுள்ள எல்லாப்பொருள்கட்கும் ஓர் உயிர் ஆனவனே! அண்டத்துக்கு மேலே உள்ள கணக்கு இல்லாதவர்களாய் விளங்குகின்ற பத்துத் திக்குக்களிலும் பரந்திருக்கின்ற முக்தர்களைப் பிரகாரமாகவுடையவனே! எண்ணிறந்து விளங்குகின்ற அறிவில்லாத எனக்குத் திருவருள்புரிய வேண்டும்,

    வி-கு :- கதி - உபாயம்; கருமமாகிய உபாயம். உலகம்-உயர்ந்தோர். உலகு - சராசரங்கள். அரு - முக்தாத்மாக்கள்.

    ஈடு :- ஏழாம்பாட்டு. 1‘“உலகில் திரிவேனோ?” என்ற உறைப்பால் உண்டான சுவாதந்திரியம் உம்முடைய தலையிலே கிடந்ததே!’ என்ன, ‘சாதனங்களும் அவற்றைச் செய்கின்றவர்களும் உனக்கு அதீனமான பின்பு, இவ் ஆற்றாமை எனக்குச் சொரூபமாய்ச் சேருமித்தனை அன்றோ?’ என்கிறார். அன்றியே, ‘பேறு உம்மதான பின்பு நீரும் சிறிது முயற்சிசெய்யவேணும் காணும்’ என்ன, ‘எல்லாமும் உனக்கு அதீனமாயிருக்க, அவற்றிற்குப் புறம்போ நான் என்காரியம் செய்கைக்கு?’ என்கிறார் என்னலுமாம்.

    உலகில் திரியும் கரும கதியாய் - உலகத்தில் பரிமாறுகிற கர்மமாகிற சாதனமாய். 2உன்னை ஒழியப் பலத்தைக் கொடுக்கக் கூடியது ஒன்று உண்டோ? உலகமாய் - அவற்றைச் செய்

 

1. முதல் அடியைக் கடாக்ஷித்து அவதாரிகை அருளிச்செய்கிறார்.
  உறைப்பால் உண்டான ஸ்வாதந்திரியம் - ஆற்றாமையால் உண்டான
  பதற்றம். ‘கிடந்ததே’ என்றது, அது சாதனம் ஆகாதோ? என்றபடி.
  ‘சாதனங்களும் அவற்றைச் செய்கின்றவர்களும்’ என்கிறார்
  “கருமகதியாய் உலகமாய்” என்றதனைத் திருவுள்ளம்பற்றி.
  மேற்பாசுரத்தில், சாதனத்தை அநுஷ்டிக்கவேண்டாவோ? என்ற
  சங்கையை அநப்யுபகம்யவாதத்தாலே (உடன்படாதவாதம்) நீக்கினார்.
  இப்பாசுரத்தில் அப்யுபகம்யவாதத்தாலே (உடன்பட்டுப் பேசும் வாதம்)
  பரிஹரிக்கிறார் என்று திருவுள்ளம் பற்றி, வேறும் ஓர் அவதாரிகை
  அருளிச்செய்கிறார் ‘அன்றியே’ என்று தொடங்கி. ‘எல்லாமும் உனக்கு
  அதீநமாயிருக்க’ என்றதற்குக் கருத்து, உன்னுடைய கிருபையைப்
  பார்த்தால் சாதனம் அநுஷ்டிக்கவேண்டுவது இல்லை என்றார் மேல்;
  அப்படி அநுஷ்டிக்கவேண்டிற்றேயாகிலும், சாதனத்தை
  அநுஷ்டிக்கின்றவர்களும் அநுஷ்டிக்கிற சாதனங்களும் உன்
  அதீநமாகையாலே எனக்கு ஒரு சுவாதந்திரியம் இல்லை; நான்
  பரதந்திரனானபின்பு சாதனம் அநுஷ்டிக்கத் தகுதி இல்லை என்கிறார்
  என்பது.

2. மேல் வாக்கியத்தை விவரணம் செய்கிறார் ‘உன்னை ஒழிய’ என்று
  தொடங்கி.