| 
க
 
கின்றவர்கள் தாம் 
சுவதந்திரர்களாய் இருக்கிறார்கள்? 1உலகம் என்பது உயர்ந்தோர்மாட்டு அன்றோ; 
உலகத்திலுள்ளார்க்கு என்றும் வரும் அன்றோ. உலகுக்கே ஓர் உயிரும் ஆனாய் - 2ஒரு 
தேகத்தை ஒரு சேதனன் ஆத்மாவாய் அபிமானித்திருக்குமாறுபோலே, எல்லாப் பொருள்களுக்கும் ஒரே 
ஆத்மா ஆனவனே! “சேதனர்களுடைய உள்ளே வியாபித்தவனாய் நியாமகனாயும் சேதன அசேதனங்களுக்கு ஆத்மாவாயும் 
இராநின்றான்” என்பது உபநிடதம். பலமாக இருக்கிற தானே கர்த்தாவும் கர்மமும் உபகரணங்களுமாயிருக்கை.
3இரண்டும் உன் தலையிலே கிடந்தால் உன்னை ஒழிய எங்ஙனே நான் ஜீவிக்கும்படி. 
 
    புற அண்டத்து - அண்டத்துக்கு 
வெளியிலே என்றபடி. அலகு இல் பொலிந்த 4திசை பத்தாய அருவேயோ - கணக்கு இல்லாதவர்களாய், 
எம்பெருமான் சொரூபத்தாலே வியாபிக்குமாறுபோலே ஞானத்தாலே பத்துத் திக்குக்களிலும் வியாபித்திருப்பாராய், 
உருவப் பொருள் போன்று கண்களுக்கு விஷயம் அன்றிக்கே அருவாக இருக்கிற ஆத்மாக்களுக்கு நிர்வாஹகன் 
ஆனவனே! இதனால், முக்தரோ தாம் சுவதந்திரராய் இருக்கிறார்கள் என்றபடி. பரமபதத்திலும் பத்துத் 
திக்குக்களாய் இருக்குமோ? என்னில், இங்கே இருந்து நினைக்கிற இவர்க்குச் சொல்லத் தட்டில்லையே. 
அங்ஙன் அன்றிக்கே, 
1. “உலகம்” என்ற சொல் 
மக்களைக் காட்டுவதற்கு மேற்கோள் 
  காட்டுகிறார் ‘உலகம் என்பது’ என்று தொடங்கி. இது, திவாகரம் 
  மக்கட் பெயர்த்தொகுதி. உலகம் என்ற சொல், ஆகுபெயராய் மக்களை 
  உணர்த்தும் என்பர் ஒரு 
சாரார். உலகம் என்பது மக்களை 
  உணர்த்துமிடத்தும் உரிய பெயரேயாகலின் ஆகுபெயரன்று என்பர் 
  சேனாவரையர். 
(தொ. சொல். சூ. 57.) 
 
2. கர்மமும் அதனைச் செய்கிறவனும் 
அவன் ஆகைக்குக் காரணம் யாது? 
  என்ன, ‘சரீர சரீரி பாவம்’ என்று கூறத் திருவுள்ளம்பற்றி அதற்கு 
விடை 
  அருளிச்செய்கிறார் ‘ஒரு தேகத்தை’ என்று தொடங்கி. என்றது, எல்லாப் 
  பொருள்கட்கும் தான் 
ஆத்மாவாகையாலே எல்லாப் பொருள்களும் 
  தனக்கு அதீனமாய் இருக்கும் என்றபடி. “அந்த: பிரவிஷ்ட: 
ஸாஸ்தா” 
  என்பது உபநிடதம். 
 
3. “உலகுக்கே ஓர் உயிருமானாய்” 
என்கிறவருடைய மனோபாவத்தை 
  அருளிச்செய்கிறார் ‘இரண்டும்’ என்று தொடங்கி. ‘இரண்டும்’ என்றது, 
  கர்மத்தையும் கர்த்தாவையும் என்றபடி. ‘உன் தலையிலே கிடந்தால்’ 
  என்றது, உன் அதீனமானால் 
என்றபடி. “உலகுக்கே ஓர் உயிர்” 
  ஆகையாலே, “உலகமாய்” என்றபடி. 
 
4. “திசை பத்தாய” - தர்மபூத ஞானத்தாலே பத்துத்திக்குக்களிலும் 
  பரந்திருக்கின்ற. “அருவேயோ” - ஆத்மாக்களைப் 
  பிரகாரமாகவுடையவனே. 
 |