| 
New Page 1
 
முக்தர் லீலாவிபூதியை நினைக்கும்போது
1இங்குள்ளபடியே நினைப்பார்கள் அன்றோ. அலகு இல் பொலிந்த அறிவிலேனுக்கு - பகவானுடைய 
சொரூப ரூப குண விபூதிகளை அளவிடினும் தம் அறிவு கேடு எண்ணப் போகாது என்கிறார். 2மயர்வற 
மதிநலம் அருளப்பெற்றவர் வார்த்தை அன்றோ. அருளாயே - 3பரிகரம் உண்டானபின் 
அருளக்குறை என்? “பகவானே! உன்னுடைய பேரருளுக்கு உத்தமோத்தமமான பாத்திரமாக இந்த வஸ்துவானது 
இப்போது உனக்குக் கிடைத்தது” என்னுமாறுபோலே. 
(7) 
648. 
        அறிவி லேனுக்கு 
அருளாய் அறிவார் உயிரானாய்! 
        வெறிகொள் சோதி 
மூர்த்தி! அடியேன் நெடுமாலே! 
        கிறிசெய்து என்னைப் 
புறத்திட்டு இன்னம் கெடுப்பாயோ? 
        பிறிதொன்று அறியா 
அடியேன் ஆவி திகைக்கவே. 
 
    
பொ-ரை :- ஞானிகளுக்கு உயிராக இருப்பவனே! வாசனையைக் 
கொண்டிருக்கிற ஒளிபொருந்திய விக்கிரஹத்தையுடையவனே! அடியேனுடைய நெடிய மாலே! விரகு அறியாத 
எனக்குக் கிருபைசெய்தருள்வாய்; வேறு ஒன்றனையும் அறியாத அடியேனுடைய உயிரானது திகைக்கும்படியாக 
வேறு உபாயங்களைச்செய்து என்னைப் புறத்திலே தள்ளி இன்னம் கெடுப்பாயோ? என்கிறார். 
 
    வி-கு :- 
வெறி - வாசனை. கிறி - விரகு. ஆவி திகைக்கக் கெடுப்பாயோ என்க. 
 
    ஈடு :- எட்டாம் 
பாட்டு. 4“அருளாய்” என்ற வாயோடே வந்து அருளக் கண்டிலர்; தன் பக்கல் நின்றும் 
பிரித்து என்னைக் கைவிடப் பார்த்தானாகாதே என்கிறார். 
1. இங்குள்ளபடியே - இங்கு உள்ளார் அநுசந்திக்கும்படியே. 
 
2. இவர் முற்றறிவினராயிருக்க, 
“அறிவிலேனுக்கு” என்கிறது என்? என்ன, 
  ‘மயர்வற’ என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார். 
என்றது, 
  சர்வஜ்ஞர் ஆகையாலே ஆகிஞ்சந்யம் தோற்றச் சொல்லுகிறார் என்றபடி. 
 
3. “அறிவிலேனுக்கு 
அருளாய்” என்கிறவருடைய மனோபாவத்தை 
  அருளிச்செய்கிறார் ‘பரிகரம்’ என்று தொடங்கி. பரிகரம் 
- ஆகிஞ்சந்யம். 
  இதற்குச் சம்வாதம் காட்டுகிறார் ‘பகவானே’ என்று தொடங்கி. 
 
  “பகவந் இதாநீம் அனுத்தமம் 
பாத்ரம் இதம் தயாயா:” 
 
  என்பது, தோத்திர ரத்நம். 24. 
 
4. “இன்னம் 
கெடுப்பாயோ” என்றதனைக் கடாக்ஷித்து அவதாரிகை 
  அருளிச்செய்கிறார். 
 |