பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
432

அற

    அறிவிலேனுக்கு அருளாய் - 1“நின்னருளே புரிந்திருந்தேன்” என்னுமாறுபோலே உன்னருள் ஒழிய வேறு ஒன்றை அறியாத எனக்கு அருளவேணும். 2“அவ்வருள் அல்லன அருளும் அல்ல” என்றேயன்றோ இவர் இருப்பது. வையகத்துப் பல்லார் அருளும் பழுதே அன்றோ. அறிவார் உயிரானாய் - அறிவார்க்கு உயிர் ஆனவனே! என்னுதல்; அறிவாரை உயிராகவுடையவனே என்னுதல். 3“ஞானியானவன் எனக்கு உயிர் போன்றவன் என்பது என்னுடைய மதம்” என்கிறபடியே; “என்னுடைய இரண்டாவது ஆத்மாவாக இருக்கிற உன்னை” என்கிறபடியே. வெறி கொள் சோதி மூர்த்தி - 4அருளாது ஒழிந்தாலும் விட ஒண்ணாத வடிவழகு. “சர்வகந்த:” என்னுமதன்றோ. பரிமளத்தையுடைத்தாய், எல்லையற்ற தேஜசையுடைத்தான வடிவழகையுடையவனே! அடியேன் நெடுமாலே - எனக்கு இப்போது 5எட்டாது இருக்கிறவனே! என்னுதல் ; வடிவழகைக் காட்டி எனக்கு வியாமோஹத்தை விளைத்தவனே! என்னுதல். கிறிசெய்து - 6நீ இப்போது உதவாமையாலே, முன்பு செய்தவையெல்லாம் விரகு அடித்தாய் என்று தோற்றாநின்றது காண்? என்னைப் புறத்திட்டு - பிராட்டியை அசோக வனத்திலே வைத்தாற்போலே,

 


1. “நின்னருளே” என்பது, பெரியாழ்வார் திருமொழி, 5. 4 : 1.

2. பிறருடைய அருள் சாதனம் அன்றோ? என்ன, சாதனம் அன்று என்று
  கூறத் திருவுள்ளம்பற்றி அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘அவ்வருள்
  அல்லன’ என்று தொடங்கி. ‘வையகத்து’ என்பது, முதல் திருவந். 15.

3. அறிவாரை உயிராகவுடையவன் என்பதற்கு இரண்டு பிரமாணங்கள்
  காட்டுகிறார் ‘ஞானியானவன்’ என்று தொடங்கியும், ‘என்னுடைய’ என்று
  தொடங்கியும்.

  “ஜ்ஞாநீத்வாத்மைவ மே மதம்” என்பது ஸ்ரீ கீதை, 5 : 18.
  “த்விதீயம் மே அந்தராத்மாநம் த்வாம் இயம்ஸ்ரீ: உபஸ்திதா”

  என்பது, ஸ்ரீராமா. அயோத். 4 : 43.

4. “அருளாய்” என்றதன்பின் “சோதிமூர்த்தி” என்று வடிவழகினைச்
  சொன்னதற்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘அருளாது ஒழிந்தாலும்’ என்று
  தொடங்கி.

5. “மால்” என்பது பெருமையாய், “நெடு” என்பதும் பெருமையாய், அதனால்
  பலித்த பொருள் அறப்பெரியோன் என்றுகொண்டு ‘எட்டாதிருக்கிறவனே’
  என்கிறார்.

6. வியாமோகத்தை விளைத்த நம்மைக் “கிறிசெய்து” என்கிறது என்? என்ன,
  அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘நீ இப்போது’ என்று தொடங்கி. ‘விரகு
  அடித்தாய்’ என்றது, எனக்குச் சம்சாரத்திலும் பொருந்தாமல் நீயும் முகம்
  காட்டாமல் துடிக்கும்படி செய்யப் பார்த்தாய் என்றபடி.