|
ஈ
ஈடு :-
முடிவில் 1இப்பத்தும் கற்றவர்கள் சர்வேசுவரனுக்கு
அந்தரங்கமான தொண்டராவர் என்கிறார்.
தெரிதல் நினைதல்
எண்ணல் ஆகாத் திருமாலுக்கு-கேள்வி விமரிசம் பாவனை இவைகளால் அளவிடமுடியாத திருமகள் கேள்வனுக்கு.
2“இந்தப் பரமாத்மாவானவன் மனனத்தாலும் தியானத்தாலும் கேள்வியினாலும் அடையத்தக்கவன்
அல்லன்” என்கிறபடியே. 3கேவலம் கேள்வி முதலானவைகட்கு அப்பாற்பட்டவனாயிருப்பான்;
4அல்லாதபோது இவை தாம் அநுபவமாய்ச் சேருமன்றோ. இதற்கு அடி, திருமகள் கேள்வனாயிருத்தலாதலின்
‘திருமாலுக்கு’ என்கிறார். 5அதுவன்றோ சர்வாதிக வஸ்துக்கு அடையாளம். திருமாலுக்கு
உரிய தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் - திருமகள் கேள்வனான சர்வேசுவரனுக்கே அடிமைபட்ட
ஆழ்வார், 6சம்சாரத்தின் தன்மையை நினைத்த
1. “உரிய தொண்டராக்கும்
உலகம் உண்டாற்கு” என்றதனைக் கடாக்ஷித்து
அவதாரிகை அருளிச்செய்கிறார்.
2. கேள்வி முதலானவைகளால்
அளவிடமுடியாமைக்குப் பிரமாணம்
காட்டுகிறார் ‘இந்தப் பரமாத்மாவானவன்’ என்று தொடங்கி.
“ந அயம் ஆத்மா ப்ரவசநேந
லப்ய:
ந மேதயா ந பஹுநா
ஸ்ருதேந
யம் ஏவ ஏஷ: வ்ருணுதே தேந
லப்ய:
தஸ்யஏஷ ஆத்மா
விவ்ருணுதே தநூம்ஸ்வாம்”
என்பது, முண்டகோபநிடதம்.
3. ஆயின், “காணத்தக்கவன்,
கேட்கத்தக்கவன், மனனம் செய்யத்தக்கவன்”
என்னும் உபநிடத வாக்கியத்தோடு முரண் ஆகாதோ?
என்ன, அதற்கு
விடை அருளிச்செய்கிறார் ‘கேவலம்’ என்று தொடங்கி. என்றது,
பிரீதியோடு
கூடியதல்லாத கேள்வி முதலானவற்றிற்குக்
காணமுடியாதவனாக இருப்பான் என்றபடி. ஈண்டு, ‘கேவலம்’ என்ற
சொல், அன்பு இல்லாமையைக் காட்ட வந்தது.
4. நன்று; கேவலம் கேள்வி
முதலானவற்றைக் கொள்ளாமல், பிரீதியோடு
கூடிய கேள்வி முதலானவற்றைக் கொண்டாலோ? எனின்,
அதற்கு விடை
அருளிச்செய்கிறார் ‘அல்லாதபோது’ என்று தொடங்கி. என்றது, கேவலம்
கேள்வி முதலானவைகள்
அன்றிக்கே, பிரீதிரூபமான கேள்வி
முதலானவைகள் ஆனபோது, சாதனதசையே தொடங்கி போக
ரூபமாயிருக்கும்
என்றபடி.
5. கேள்வி முதலானவற்றால்
அளவிடமுடியாமைக்குத் திருமகள்
கேள்வனாக இருத்தல் காரணமோ? என்ன, ‘அதுவன்றோ’ என்று
தொடங்கி
அதற்கு விடை அருளிச்செய்கிறார்.
6. இப்போது
தம்மைச் சரமாவதி சேஷமாக அருளிச்செய்யும் கருத்து யாது?
என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
‘சம்சாரத்தின்’ என்று
தொடங்கி.
|