பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
440

New Page 1

கொடுமையாலும், பகவத்விஷயத்திலே மூழ்கின கனத்தாலும், பெருவிடாயன் மடுவிலே விழுமாறு போலே, சேஷத்துவத்தினுடைய எல்லையிலே விழுகிறார் ‘தொண்டர் தொண்டர் தொண்டன்’ என்று. 1இது இவருடைய அகம்புத்தி இருக்கிறபடி. 2தேக ஆத்ம அபிமானியாம்போது தேகத்திலே அகம்புத்தியைப் பண்ணுவான்; ‘தேகத்திற்கு வேறுபட்டது ஒன்று உண்டு’ என்று அறிந்தபோது ஆத்மாவிலே அகம் புத்தியைப் பண்ணுவான்; தன்னைப் பகவானுக்கு அடிமையாக நினைத்தபோது பிரகார மாத்திரத்திலே நின்று செல்வம் முதலானவற்றைக்கொண்டு போவன்; ‘அடிமையாக இருத்தலே பேறு’ என்று அறிந்தபோது தன்னை அடியார்கட்கு அடியவன் என்னுமளவாக அநுசந்திக்கக் கடவன். 3“பயிலும் சுடர் ஒளி” என்ற திருவாய்மொழிக்குப் பின்பு அடியார்கட்கு அடிமையாக இருத்தல் அளவாக ஆயிற்று, இவருடைய அகம் என்ற சொல்லுக்குப் பொருள் இருப்பது. 4இவ்வளவு வருகை அன்றோ அநந்யார்ஹ சேஷத்வமாவது. தெரியச் சொன்ன ஓர் ஆயிரத்துள் இப்பத்தும் - பகவானுடைய வைலக்ஷண்யத்தையும் சம்சாரத்தினுடைய தோஷத்தையும் தெளிவாகச் சொன்ன இருப்பத்தும். உலகம் உண்டாற்கு உரிய தொண்டர் ஆக்கும்-சர்வரக்ஷகனான சர்வேசுவரனுக்கு அநந்

 

1. இதனால், ‘ஆத்மாவுக்கு நிரூபகம் அடியார்க்கு அடிமையாயிருத்தலே’
  என்று தோற்றுகிறது என்கிறார் ‘இது இவருடைய’ என்று தொடங்கி.

2. உலகத்தார் சரீரம் முதலானவைகளிலே அகம் புத்தியைச் செய்யாநிற்க,
  இவர் இப்படி நினைப்பதற்குக் காரணம் யாது? என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார் ‘தேகாத்ம அபிமானியாம்போது’ என்று தொடங்கி.

3. ஆயின், இங்ஙனம் ததீய சேஷத்வத்தை இட்டு நிரூபிக்கை மற்றைத்
  திருவாய்மொழிகளிற் காணோமே? என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார் ‘பயிலும் சுடர்’ என்று தொடங்கி.

4. ஆயின், ஈசுவரனுக்கு அடிமை என்று கூறுகின்ற பிரமாணங்களுக்கு
  விரோதம் வாராதோ? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
  ‘இவ்வளவு’ என்று தொடங்கி. இங்கு,

  மற்றுமோர் தெய்வம் உளதென் றிருப்பாரோடு
  உற்றிலேன்; உற்றதும் உன்னடியார்க் கடிமை
  மற்றெல்லாம் பேசிலும் நின் திருவெட்டெழுத்தும்
  கற்று, நான் கண்ண புரத்துறை யம்மானே!

 
என்ற திருப்பாசுரம் நினைவு கூர்க. பெரிய திருமொழி.