பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
441

யார்ஹசேஷமாக்கும் இத் திருவாய்மொழி. 1சம்சாரம் நன்றுமாய், பகவத்விஷயம் தீதானாலும் அதனை விடமாட்டாதவர்களாதலின் ‘உரிய தொண்டர்’ என்கிறார்.

(11)

திருவாய்மொழி நூற்றந்தாதி

        நீராகிக் கேட்டவர்கள் நெஞ்சழிய மாலுக்கும்
        ஏரார் விசும்பில் இருப்பரிதால் - ஆராத
        காதலுடன் கூப்பிட்ட காரிமா றன்சொல்லை
        ஓதிடவே உய்யும் உலகு.

(59)

    ஆழ்வார் எம்பெருமானார் சீயர் திருவடிகளே அரண்.

 

1. “உரிய” என்ற சொல்லுக்குப் பொருள் அருளிச்செய்கிறார் ‘சம்சாரம்’
  என்று தொடங்கி. என்றது, “குணங்கொடன்றோ இராமன் மேல் நிமிர்ந்த
  காதல்” என்கிறபடியே, குணம் கண்டு செய்யும் அடிமையைக் காட்டிலும்,
  சொரூபத்தோடுகூடியது அடிமை என்பதனை அறிந்து அதனைச்செய்தலே
  நன்று ஆதலின், அதனைச் செய்விக்கும் இப் பத்து என்றபடி. உரிய -
  தகுதியான. “குணக்ருத தாஸ்யத்திலுங் காட்டில் ஸ்வரூபப்ரயுக்தமான
  தாஸ்யமிறே பிரதானம்” என்பது, ஸ்ரீ வசன பூஷணம், பிரகரணம்,
  1. சூத். 111.