பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
442

பத

பத்தாந் திருவாய்மொழி - “உலக முண்ட”

முன்னுரை

    ஈடு :- 1மேல் திருவாய்மொழியிலே, பிராப்பியத்தின் தன்மை இருக்கும்படி குறைவறச் சொன்னார்; இத் திருவாய்மொழியில் பிராபகத்தின் தன்மை குறைவறச் சொல்லுகிறார். 2மேல் திருவாய்மொழியிலே உபாயத்தைப் பற்றிக் கூறுகின்ற வாக்கியங்கள் உண்டேயாகிலும், பிராப்யம் பிரதாநமாகக் கடவது; இத் திருவாய்மொழியில் உபேயத்தைப்பற்றிக் கூறுகின்ற வாக்கியங்கள் உண்டேயாகிலும், பிராபகம் பிரதாநமாகக்கடவது. 3மேல் திருவாய்மொழி திருமந்திரம் போலே. இந்தத் திருவாய்மொழி சரமஸ்லோகம்போலே.

 

1. மேல் திருவாய்மொழிக்கும் இத்திருவாய்மொழிக்குமுள்ள இயைபினைச்
  சுருக்கமாக அருளிச்செய்கிறார் ‘மேல் திருவாய்மொழியிலே’ என்று
  தொடங்கி. என்றது, இத்திருவாய்மொழியில் சரணம் புகுகிறார் என்று
  சங்கதி சொல்லுகையாலே, சரணாகதனான சர்வேசுவரனுக்கு, பக்தனைக்
  காட்டிலும் ஏற்றம், பிராப்பிய பிராபகங்கள் என்னும் இரண்டும்
  அவனேயாக இருத்தலேயாதலின், சர்வேசுவரனுடைய அந்தப் பிராப்பிய
  பிராபகத் தன்மைகளை மேல் திருவாய்மொழியிலும்
  இத்திருவாய்மொழியிலும் அருளிச்செய்கிறார் என்றபடி. “கோலத்
  திருமாமகளோடு உன்னைக் கூடாதே” என்றும், “தடந்தாமரைகட்கே”
  என்றும் மேல் திருவாய்மொழியில் அருளிச்செய்ததனைத்
  திருவுள்ளம்பற்றிப் ‘பிராப்பியத்தின் தன்மை. . . . . .குறைவறச் சொன்னார்’
  என்கிறார். இத்திருவாய்மொழியில் வருகின்ற “அகலகில்லேன் இறையும்”
  என்பது போன்றவைகளைத் திருவுள்ளம் பற்றிப் ‘பிராபகத்தின் தன்மை
  குறைவறச் சொல்லுகிறார்’ என்கிறார். பிராப்பியம் - அடையத்தக்கது;
  பேறு. பிராபகம் - அதனை அடைதற்குரிய வழி. பிராப்பியம், உபேயம்,
  சாத்யம் என்பனவும்; பிராபகம், உபாயம், சாதனம் என்பனவும் ஒருபொருட்
  சொற்கள்.

2. ஆயின், மேல் திருவாய்மொழியில் “காப்பானே” என்றதனால்
  உபாயத்தின் தன்மையையும், இத்திருவாய்மொழியில் “நாற்றோள் அமுதே”
  என்றதனால் உபேயத்தின் தன்மையையும் அருளிச்செய்துள்ளனரே?
  எனின், அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘மேல் திருவாய்மொழியிலே’
  என்று தொடங்கி.

3. இரண்டும் உளவானாலும் ஒன்றே பிரதானமாக இருக்கும் என்பதற்குத்
  திருஷ்டாந்தம் காட்டுகிறார் ‘மேல் திருவாய்மொழி’ என்று தொடங்கி.
  ‘திருமந்திரம்’ என்றது, பிராப்பியத்திலே பிரதானமான திருமந்திரத்திலே
  என்றபடி. ‘சரமஸ்லோகம்’ என்றது, பிராபகத்திலே பிரதானமான
  சரமஸ்லோகத்திலே என்றபடி. இங்கு,

  ஒருபெயர்ப் பொதுச்சொல் உள்பொருள் ஒழியத்
  தெரிபுவேறு கிளத்தல் தலைமையும் பன்மையும்
  உயர்திணை மருங்கினும் அஃறிணை மருங்கினும். 

 
என்ற சூத்திரம் கருதற்பாலது.

(தொல். சொல். 49.)