|
1இரண
1இரண்டும்
ஒன்றிலே உண்டே? என்னில், 2அது சக்தியோகத்தாலே வருமது அன்றோ; வெவ்வேறு நிலைகளைப்பற்றி
வரும் இரண்டும் இரண்டாயே இருக்கக்கடவன.
3மிகப்பெரிய
துன்பத்தோடே பரமபதத்திலே கேட்கும்படி கூப்பிடச்செய்தேயும் சர்வரக்ஷகனானவன் வந்து முகம் காட்டாமையாலே
மிகவும் தளர்ந்தவராய், திருமகள்கேள்வனாய் எல்லா விருப்பங்களும் நிறைந்தவனாய் உபய விபூதிகளோடு
கூடினவனாய் எல்லா நற்குணங்களையு முடையவனாய் 4“நினைவிற்கும் எட்டாத சொரூபத்தையுடைய
உலகநாதனான விஷ்ணுவானவர் பிராட்டியோடும் பக்தர்கள் பாகவதர்களோடுகூட ஸ்ரீ வைகுண்டம் என்கிற
சிறந்த உலகத்தில் எழுந்தருளியிருக்கிறார்” என்கிறபடியே, நித்தியசூரிகட்குக் காட்சிகொடுத்துக்கொண்டு
இருக்கக் கூடிய சர்வேசுவரன், பலரும் நம்மை இழக்க நாம் நெடுங்கை நீட்டாக இருக்க ஒண்ணாது என்று
பார்த்தருளி, இராமன் கிருஷ்ணன் முதலான அவதாரங்களைச் செய்து அந்தக் காலத்திலே உள்ளவர்கட்குத்
தன் குணங்களையும் செயல்களையும் காட்டி அநுபவிப்பித்தான்; அக் காலத்திலும் பிற்பாடரான சம்சாரிகளுக்கும்
இழக்கவேண்டாதபடி ருசி உண்டாக்குகிறவனாய்க் கொண்டு வந்து திருமலையிலே நாய்ச்சியாருடனேகூட நின்றருளினான்;
1. ‘இரண்டும் ஒன்றிலே உண்டே?’ என்பதற்குக் கருத்து, பிராப்பியத்வ
பிராபகத்வங்கள்
இரண்டும் நித்தியமாகையாலே, பால் மருந்தாமாறு
போலே, பிராப்பியத்வ நிலையிலும் பிராபகத்வம்
சர்வேசுவரனிடத்தில்
இருந்துகொண்டிருக்க, அது பிராப்பியத்தைச் சொல்லுகிறது, இது
பிராபகத்தைச்
சொல்லுவது என்று பிரிக்கக்கூடுமோ? என்பது.
2. ‘அது சக்தியோகத்தாலே’
என்று தொடங்கும் வாக்கியத்துக்குக் கருத்து,
பிராப்பியமே பிராபகமாக வல்ல சக்தியோகத்தாலே
இரண்டும் ஒரு
பொருளில் எப்போதும் உளவானாலும், சேதனன் பற்றுகிற நிலை
என்றும், அடைந்து அநுபவிக்கிற
நிலை என்றும் சொல்லப்படுகின்ற
நிலை வேறுபாடுகளாலே, பிராப்பியத்வ பிராபகத்வங்கள் இரண்டும்
முறைப்படி இருக்கவேண்டுவன ஆகையாலே, இப்படிப் பிரிப்பதில்
குற்றம் இல்லை என்பது. சக்தி -
ஈசுவரனுடைய சக்தி. யோகம் -
சேர்க்கை.
3. மேலே சுருங்க அருளிச்செய்ததனை
விரித்து அருளிச்செய்கிறார் ‘மிகப்
பெரிய’ என்று தொடங்கி.
4. ‘வைகுண்டே து பரேலோகே
ஸ்ரியா ஸார்த்தம் ஜகத்பதி:
ஆஸ்தே
விஷ்ணு: அசிந்த்யாத்மா பக்தை: பாகவதை: ஸஹ”
|