|
1அத
1அதிகாரிநியதி,
காலநியதி, அங்கநியதி என்றாற்போலே சொல்லுகிற நிர்ப்பந்தங்கள் ஒன்றும் இன்றிக்கே
அடையலாம்படி அங்ஙனம் நிற்கிற சௌசீல்யத்தைக் கண்டு, திருவேங்கடமுடையான் திருவடிகளிலே, பெரிய
பிராட்டியார் முன்னிலையாகத் தம்முடைய வேறுகதி இல்லாமையை விண்ணப்பம் செய்து சரணம்புக்குத்
தம்முடைய எண்ணத்தை அறிவிக்கிறார்.
2மேலேயும்,
பல இடங்களிலே சரணாகதி செய்தார்; அந்த அந்த இடங்களிலே ‘தர்மிபுக்க இடத்தே நிரூபக தர்மங்களும்
புகக் கடவன’ என்கிற நியாயத்தாலே, லக்ஷ்மீ சம்பந்தம் சொன்னார்; இங்கு அது தன்னையே
வாய்விடுகிறார். 3மேலேயுள்ள சரணாகதிகள் திருமந்திரம் போலே; இது துவயம்
போலே. 4திருமந்திரத்திலும் லக்ஷ்மீ சம்பந்தத்துக்கு வாசகமான சொற்கள் உண்டாயிருக்கச்
செய்தேயும், வெளிப்படையாகச் சொல்லிற்று துவயத்திலே அன்றோ; அதுபோலே இத் திருவாய்மொழி.
5“தாவத் ஆர்த்தி:- ‘இழந்தது
1. அதிகாரிநியதியாவது,
தசரதன் வசுதேவன் முதலான அக்காலத்துள்ள
அதிகாரிகளுக்கே என்ற நியதி. காலநியதியாவது,
கிருதயுகம் துவாபரயுகம்
என்பனபோன்ற காலங்களின் நியதி. அங்கநியதி - நீராடல் முதலான
அங்கங்களின்
நியதி.
2. மேலே நான்கு திருவாய்மொழிகளிலே
நான்கு முறை சரணம் புக்காரே,
அதற்கும் இதற்கும் வாசி என்? என்னில், ‘மேலேயும்’ என்று தொடங்கி
அதற்கு விடை அருளிச்செய்கிறார். வாய்விடுகிறார் - வெளிப்படையாகச்
சொல்லுகிறார்.
3. அதற்குத் திருஷ்டாந்தம்
காட்டுகிறார் ‘மேலேயுள்ள’ என்று தொடங்கி.
4. மேலேகூறிய திருஷ்டாந்தத்தை
விவரணம் செய்கிறார் ‘திருமந்திரத்திலும்’
என்று தொடங்கி. ‘வாசகமான’ என்றது, பொருள் ஆற்றலால்
அறிவிக்கின்ற என்றபடி. “உகார நார” பதங்களைத் திருவுள்ளம்பற்றி
‘வாசகமான’ எனப் பன்மை வாசகத்தால்
அருளிச்செய்கிறார்.
5. சரணாகதியானது மோக்ஷத்தைக்
கொடுக்கக் கூடியதாமோ? என்ன,
‘மோக்ஷத்தைக் கொடுக்கக்கூடியது மாத்திரமன்று; மற்றைய பலன்களைப்
பெறுதற்கும் இது சாதனமாம்’ என்று கூறத் திருவுள்ளம் பற்றி அதற்குப்
பிரமாணமும் பிரமாணத்திற்குப்
பொருளும் அருளிச்செய்கிறார் ‘தாவத்
ஆர்த்தி:’ என்று தொடங்கி.
“தாவத்ஆர்த்தி: ததாவாஞ்சா
தாவந்மோஹ: ததா ஸுகம்
யாவந் நயாதி ஸரணம் த்வாம்
அஸேஷாக நாஸநம்”
என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா.
பகவானைப்பார்த்துப் பிரமன் கூறியது.
இச்சுலோகம் நால்வகை அதிகாரிகளைக் கூறுகிறது.
|