|
New Page 1
பெறவேணும்’ என்னுமதுவும்
1அவ்வளவே. 2ததாவாஞ்சா-அப்ராப்த விஷயத்தில் செய்யும் சாபலமும்
அவ்வளவே. 3தாவந்மோஹ: - சரீரத்தையும் ஆத்மாவையும் ஒன்றாக புத்திபண்ணுகை என்னும்
அதுவும் அவ்வளவே. 4ததாஸுகம் - “ஏஷஹ்யேவாநந்தயாதி - இவனேயன்றோ ( சீவனுக்கு )
ஆனந்தத்தைக் கொடுக்கிறான்” என்கிறதற்கு விரோதமாக வரும் சுகங்களும் அவ்வளவே. யாவந்நயாதிஸரணம்
த்வாம் அஸேஷாகநாஸனம் - 4செல்வம் ஆத்ம்பிராப்தி பகவத்பிராப்தி விரோதி
இவை எல்லாம் உன்னைக்கிட்டுமளவே யன்றோ நிற்பது” என்கிறது. இப்படியே தம்முடைய எல்லா விரோதிகளும்
போய்த் தம்முடைய எல்லா அபேக்ஷிதங்களும் கிடைக்கைக்கு ஒரு குறை இல்லை என்று, எப்பொழுதும் அண்மையில்
இருக்கிற திருவேங்கடமுடையான் திருவடிகளிலே சரணம் புகுகிறார்.
“சதுர்விதா பஜந்தே
மாம் ஜநா: ஸுக்ருதிநோர்ஜுந
ஆர்த்தோ ஜிஜ்ஞாஸு:
அர்த்தார்த்தீ ஜ்ஞாநீச பரதர்ஷப”
என்ற ஸ்ரீகீதை இங்கு அநுசந்தேயம்.
7 : 16.
1. ‘அவ்வளவே’ என்றது,
அவனைப் பற்றுமளவே என்றபடி. ‘இழந்தது
பெறவேணும்’ என்றதனால், ஆர்த்தனைச் சொல்லுகிறது. அதாவது,
இழந்த செல்வத்தை மீண்டும் பெறவேண்டும் என்று விரும்புகிற
ஐசுவரியகாமனைச் சொல்லுகிறது என்றபடி.
2. “வாஞ்சா” என்று செல்வத்தை
விரும்புகிறவனுடைய ஆசையைச்
சொல்லுகையாலே “ததாவாஞ்சா” என்பது, புதிதாகச் செல்வத்தைப் பெற
விரும்புகிறவனைச் சொல்லுகிறது. ‘அப்ராப்தவிஷயத்தில்’ என்றது, முன்பு
இல்லாத ஐசுவரியத்தை என்றபடி.
3. “தாவந்மோஹ:” என்ற
இது, ஆத்மபிராப்திகாமனைக் கூறுகிறது.
“மோஹம்” என்றது, ஆத்மபிராப்திகாமனுக்கு, ஆத்ம அநுபவ
விரோதியான தேஹாத்மாபிமான ரூபமான அஞ்ஞானத்தை. சர்வேசுவரன்
திருவடிகளை அடைந்தால் அது போகையாலே,
சர்வேசுவரனைப்
பற்றுமளவே அவனுக்கு அந்த அஞ்ஞானம் இருக்கும் என்றபடி.
4. “ததா ஸுகம்” என்ற
இது, ஞானியைச் சொல்லுகிறது. “ஸுகம்” என்றது,
ஆத்மாநுபவ ஐசுவரிய அநுபவங்களை. இவை, பகவத்
பிராப்திகாமனுக்குத் தடைகளாம். சர்வேசுவனைப் பற்றினால், அந்தத்
தடைகள் நில்லாவாதலின்
அவனைப் பற்றுமளவே அந்த சுகங்கள்
உள்ளனவாம் என்றபடி. ‘விரோதமாக வரும் சுகங்கள்’ என்றது,
பகவத்
அநுபவத்துக்குத் தடைகளான ஐசுவரிய ஆத்மாநுபவ சுகங்களைக்
குறித்தபடி.
5.
“அஸேஷாக நாஸநம்” என்றதன் பொருள், ‘செல்வம்’ என்று தொடங்கும்
வாக்கியம். ‘பகவத்
ப்ராப்திவிரோதி’ என்றதிலுள்ள ‘விரோதி’ என்ற
பதத்தை, செல்வ விரோதி, ஆத்ம பிராப்திவிரோதி
என
முன்னுள்ளவற்றோடும் கூட்டுக.
|