பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
446

1இன

    1இனித்தான், சரணாகதி பலத்தைக் கொடுப்பதாகுமிடத்தில், சரண்யன் பக்கலிலே செய்யவும்வேணும்; தான் அதிகாரியாகவும் வேணும். 2நற்குணங்கள் இல்லாதவர்களிடத்திலே செய்யுமிடத்தில் அதுதானே கொல்லுதலுக்குக் காரணமாகக் காணாநின்றோம் அன்றோ. 3இங்ஙனே இருக்கச்செய்தேயும் அந்த அந்த இடங்களிலும் பலிக்கிற இது, இவ் விஷயத்தில் பலிக்கின்றது என்னுமிடம் கிம்புநர் நியாயத்தாலே சித்திப்பதாம். 4இனி, அதிகாரியாமிடத்தில், மெய்யே வேறு கதி அற்றவனாகவும் இருக்கவேணும்; 5சரணம்புகா, பலித்தது இல்லை என்னா, “இந்தக் கடல் பொறுமையோடு கூடிய என்னைச் சக்தி இல்லாதவனாக அன்றோ நினைக்கிறது” என்பார் ஆகாது. 6“மயர்வறமதிநலம் அருளினன்” என்னா,

 

1. “உலகம் உண்ட பெருவாயா” என்பது போன்றவைகளால் சரண்யனான
  சர்வேசுவரன் சொரூபமும், “குலதொல் அடியேன்” என்பது
  போன்றவைகளால் அதிகாரி சொரூபமும், சொல்லப்படுகின்றன;
  சரணாகதியினாலே பலம்பெறுதற்கு இவ்விரண்டும் வேண்டுவன
  ஆகையாலே என்கிறார் ‘இனித்தான்’ என்று தொடங்கி. ‘சரண்யன்’
  என்றது, குணாதிகன் என்பதனைக் குறித்தபடி.

2. குணம் இல்லாதவர்களிடத்திலே சரணாகதிசெய்தால், பலம் கிடையாது;
  மேலும் கேட்டிற்குக் காரணமாம் என்கிறார்
  ‘நற்குணங்களில்லாதவர்களிடத்தில்’ என்று தொடங்கி. பலம்
  கிடையாமற்போதலை, பரசுராமனைச் சரணம்புக்க தசரத
  சக்கரவர்த்தியிடத்தில் காணல்தகும். கம்பராமாயணம் பரசுராமப் படலம்
  15-முதல் 25-முடிய உள்ள செய்யுட்களில் காண்க.

3. ஆயின், பகவானுக்கு வேறுபட்டவர்களான சிபிச்சக்கரவர்த்தி
  முதலாயினோரிடம் செய்த சரணாகதி பலம் கொடுத்துளதே? எனின்,
  அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘இங்ஙனே இருக்கச்செய்தேயும்’
  என்று தொடங்கி. ‘அந்தஅந்த இடங்கள்’ என்றது, சிபி
  முதலாயினோரைக் குறித்தபடி.

4. ‘தான் அதிகாரியாகவும் வேணும்’ என்று மேலே அருளிச்செய்ததை
  விரித்து அருளிச்செய்யத் திருவுள்ளம்பற்றி அதனை அருளிச்செய்கிறார்
  ‘இனி’ என்று தொடங்கி.

5. வேறுகதியுடையவனுக்குச் சரணாகதி பலத்தைக் கொடுக்காது
  என்னுமதனைப் பிரமாண முகத்தாலே காட்டுகிறார் ‘சரணம்புகா’ என்று
  தொடங்கி.

  “க்ஷமயா ஹி ஸமாயுக்தம் மாமயம் மகராலய:
   அஸமர்த்தம் விஜாநாதி திக்க்ஷமாம் ஈத்ருஸேஜநே”

  என்பது, ஸ்ரீராமா. யுத். 21 : 20.

6. ஆயின், அதிகாரிகளாவார் யாவர்? என்ன, ஆழ்வார்போல்வாரே யாவர்
  என்று விடை அருளிச்செய்கிறார் ‘மயர்வற’ என்று தொடங்கி. என்றது,
  “அருளினன்” என்கிறபடியே, அவனுடைய திருவருளையே உபாயமாக
  அறுதியிட்டு, உடனே பலியாவிட்டாலும் தம்முயற்சி என்பது சிறிதும்
  இல்லாமலே, ‘மடல் எடுக்கிறேன்’ என்று அச்சம் உறுத்தி