பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
447

உட

உடனே மடல் எடுத்துக்கொண்டு புறப்படுவார் வேணும். 1செய்த சரணாகதிக்குப் பலம் தாழ்த்தது என்னா, வேறே போக்கடியுடையார்க்குக் காரியகரம் ஆகாதே அன்றோ. 2“சமுத்திரத்தை வற்றும்படி செய்யப்போகிறேன்; வானரவீரர்கள் கால்களால் நடந்து செல்லட்டும்” என்று அவன் தாழ்த்ததுவே காரணமாக, சமூத்திர ராஜனை அழித்துப் பொகட்டு, மற்றை நான்கு பொருள்களையும் கொண்டு காரியம் கொள்ளுகிறேன் என்றாரே அன்றோ. “க்ஷமயாஹி ஸமாயுக்தம் - 3‘ஒரு பெண் பெண்டாட்டி எனக்கு என்றதனை நாம் விரும்புவது என்?’ என்று இராஜ்யத்தைப் பொகட்டுப் பொறுத்துப் போந்தார்; இங்கே வருணனை வழிவேண்டி அவன் முகங்காட்டிற்றிலன் என்னா, சீறிக் காலைக் கையைக் கட்டாநின்றார்; இது இருந்தபடி என்?” என்றாற்போலே இருந்தார்கள் முதலிகள்.

 

  அவனாலேயே காரியங்கொள்ளுவாராக வேண்டும் என்றபடி. மடல்
  எடுத்தல் சொரூபத்திற்கு விரோதமானாலும், அவனைக்கொண்டே
  தம்முடைய காரியத்தை முடித்துக்கொள்ளுகையாலே
  அநந்யகதித்வத்திற்குக் குற்றம் இல்லை என்று திருவுள்ளம் பற்றி ‘மடல்
  எடுத்துக்கொண்டு புறப்படுவார் வேணும்’ என்கிறார்.

1. “அஸமர்த்தம் விஜாநாதி - ஆற்றல் இல்லாதவனாக அன்றோ என்னை
  நினைக்கிறது” என்பார் அதிகாரிகள் ஆனால் வரும் குற்றம் யாது?
  என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘செய்த சரணாகதிக்கு’ என்று
  தொடங்கி.

2. வேறே போக்கடியுடையார் யார்? என்ன, ‘இன்னார்’ என்கிறார்
  ‘சமுத்திரத்தை’ என்று தொடங்கி.

  “சாபம்ஆநய ஸௌமித்ரே ஸராந்ச ஆஸீவிஷ உபமாந்
   ஸாகரம் ஸோஷ யிஷ்யாமி பத்ப்யாம் யாந்து ப்லவங்கமா:”

  என்பது, ஸ்ரீராமா. யுத். 21 : 22.

3. “க்ஷமயா ஹி” என்ற சுலோகத்திலேயுள்ள “திக்க்ஷமாம்” என்ற
  சொற்றொடரிலே நோக்காக அவதாரிகை அருளிச்செய்கிறார் ‘ஒருபெண்
  பெண்டாட்டி’ என்று தொடங்கி. என்றது, பரிபவித்தது இருவர்க்கும்
  ஒத்திருக்க, கைகேசியினிடத்தில் பொறுமை காட்டியது என்? இங்குப்
  பொறுமை வேண்டா என்கிறது என்? அங்குப் பொறுமை காட்டினால்,
  இங்கும் பொறுமை காட்டவேண்டாவோ? என்றபடி. ‘காலை’ என்றது,
  வில்லின்காலை. ‘கை’ என்றது, விரற்சரட்டை. ‘இருந்தார்கள் முதலிகள்’
  என்றதன்பின், அவர்களுடைய சங்கைக்கு விடையைச் சேர்த்துக்கொள்ள
  வேண்டும். அதாவது, கைகேசி, கடலைப்போன்று தம்மை ஆற்றல்
  இல்லாதவராக நினைக்க இல்லை; அபலையாகையாலே இராச்சியத்தை
  ஆசைப்பட்டாளித்தனை; ஆகையாலே, அங்குப் பொறை கொள்ளப்பட்டது;
  வருணன், தம்மை ஆற்றல் இல்லாதவராக நினைக்கையாலே இங்குப்
  பொறை கொள்ளப்பட இல்லை என்றபடி.