|
1
1‘இவன்
வந்திலன்’ என்று நாம் சீற ஒண்ணாதபடி, வாலி புறப்படுகிறபோது தாரை வந்து காற்காட்டினத்தைப்
போன்று, பொறை வந்து நம்மைக் காற்கட்டா நின்றது என்றார். - 2“மாம் -
‘தூங்கினவன் மதங்கொண்டவன் கோபித்தவன் இவர்களுக்கு இயற்கை உணர்வு வெளிப்படும்’ என்கிறபடியே,
கோபம் விளைந்த பின்னர் ஜந்மத்தை உணர்ந்தார். ‘பிறர்கை பார்த்திருக்கும் குடிப்பிறப்பு
அன்று’ என்று இருக்கிறது இல்லை; ‘நம்மை ஐயர் மகன்’ என்று அறிகிறது இல்லை. அயம்
- மஹோததி என்னும் பெருமையை நினைத்திராநின்றது; தன்னைச் சிறாங்கித்திருக்கிற நம்மை அறிகிறது
இல்லை. மகராலய :- ஓர் அயோத்யாதிபதி, கோசலாதிபதிகளோடு ஒக்கக்காணும் தன்னை நினைத்திருக்கிறது;
தன்னை மீன்படுகுட்டமாக அறிகிறது இல்லை. அஸமர்த்தம் விஜாநாதி - செவ்வை கெடப் பரிமாறினாரையும்
ஒக்கவிட்டுக் காரியம் கொள்ளவல்லோம் என்று அறிகிறது இல்லை. இவ்வளவில் செய்ய அடுப்பது என்?
என்னில், திக்க்ஷமாம் - இப்போது பொறையை வேண்டோம். 3விநியோகமுள்ள இடத்தே
அன்றோ காரியம் கொள்ளுவது? கோபத்தைப்போன்று, காரியகாலத்தே அழைத்துக் காரியம்
கொள்ளப் பார்த்தோம். அது என்? இக்ஷ்வாகு குலத்தினராயிருப்பார்க்குப் பொறைகொண்டு காரியம்
கொள்ளவேண்டாவோ?
1. ஆயின், முதலிலேயே வலியைக்காட்டாமல்,
மூன்றுநாள் திருக்கண்
வளர்ந்தருளிச் சரணம் புகுவான் என்? என்கிற முதலிகளுடைய
அபிப்பிராயத்தைத்
திருவுளத்தே கொண்டு அதற்கு விடை
அருளிச்செய்கிறார் ‘இவன் வந்திலன்’ என்று தொடங்கி. இதற்கு,
“க்ஷமயாஹி” என்ற சுலோகத்திலே உள்ள முதற்பதத்திலே நோக்கு.
2. அச்சுலோகத்திற்குப்
பொருள் அருளிச்செய்கிறார் “மாம்” என்று
தொடங்கி. ஜன்மத்தை உணர்ந்தவருடைய மனோபாவத்தை
அருளிச்செய்கிறார் ‘பிறர்கை’ என்று தொடங்கி. அதனை விவரணம்
செய்கிறார் ‘நம்மை’ என்று தொடங்கி.
‘ஐயர் மகன்’ என்றது,
சம்பராந்தகனுடைய மகன் என்றபடி. “அயம்” என்றதனால்,
பரிச்சேதித்துக்
காட்டுகிறார் என்று பாவம் அருளிச்செய்கிறார்
‘மஹோததி’ என்று தொடங்கி. “மகராலய:” என்றதற்கு,
பாவம், ‘தன்னை
மீன்படுகுட்டம்’ என்று தொடங்கும் வாக்கியம். செவ்வை கெடப்
பரிமாறினார் -
அநீதியிலே நடந்தவர்கள். ஒக்கவிட்டு - தண்டித்து
அநுகூலராக்கி.
3. பின்னர்
எப்பொழுது வேண்டும்? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
‘விநியோகம்’ என்று தொடங்கி.
அதனை விவரணம் செய்கிறார்
‘கோபத்தைப்போன்று’ என்று தொடங்கி.
|