பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
450

New Page 1

போன்றதேயா மன்றோ? 1பாதுகாக்கப்படுகின்ற பொருள்களின் அளவன்றிக்கே இருக்கும் பாரிப்பையுடையவனே! 2உன் பாரிப்புக்கும் என் துயரத்துக்கும் என்ன சேர்த்தி உண்டு? 3நீ, அறிந்த சம்பந்தமும் ஆபத்துமே கைம்முதலாகக் காப்பாற்றுமவன் அன்றோ! 4ஒரு விபூதிக்காக ஆபத்து வரிலோ நோக்கலாவது! விபூதிக்காக உண்டான ஆபத்து என் ஒருவனுக்கும் உண்டானால் நோக்கலாகாதோ? பிரளயார்ணவத்திலே அழுந்துவாரையோ நோக்கலாவது! சம்சார அர்ணவத்தில் அழுந்துவாரை நோக்கலாகாதோ? 5அபேக்ஷிக்காதவர்களையோ நோக்கலாவது! அபேக்ஷித்தார்க்கு உதவலாகாதோ? 6சரீரத்துக்கு வரும் ஆபத்தையோ நோக்கலாவது! ஆத்மாவுக்கு வரும் ஆபத்தை நோக்கலாகாதோ? ஜலப்பிரளயத்தில் அகப்படிலோ நோக்கலாவது! விரஹ பிரளயத்தில் அகப்பட்டாரை நோக்கலாகாதோ? பிறரால் வரும் ஆபத்தையோ நோக்கலாவது! உன்னால் வரும் ஆபத்தை நோக்கலாகாதோ? 7‘சரணம்புகாதாரை ரக்ஷிக்கவேண்டும்7 என்கிற நியதி உண்டோ! சரணம்புக்காரை ரக்ஷிக்கலாகாதோ? 8ரக்ஷித்துச் சமைந்து பின்னையும் ‘ஒன்றும் செய்யப்பெற்றிலோம்’ என்று இருக்கக்கடவ உனக்கு என்னுடைய

 

1. “பெரு” என்ற சொல்லுக்கு, பாவம் அருளிச்செய்கிறார்
  ‘பாதுகாக்கப்படுகின்ற’ என்று தொடங்கி. பெருமை, பாரிப்பின்
  மிகுதியைச் சொல்லுகிறது.

2. இப்பாரிப்பை இட்டு அவனை விளிக்கின்றவருடைய மனோபாவத்தை
  அருளிச்செய்கிறார் ‘உன்பாரிப்புக்கும்’ என்று தொடங்கி.

3. காப்பாற்றும்போது ஒரு கைம்முதல் வேண்டாவோ? என்ன ‘நீ, அறிந்த’
  என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.

4. “உலகம்” என்றதனைக் கடாக்ஷித்து, ஒருவருக்காக ஒருகாரியம்
  செய்யப்போமோ? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘ஒரு
  விபூதிக்காக’ என்று தொடங்கி.

5. “உலகம்” என்ற அஃறிணைச்சொல்லை நோக்கி, பாவர்
  அருளிச்செய்கிறார் ‘அபேக்ஷிக்காதவர்களையோ’ என்று தொடங்கி.

6. பிரளயார்ணவத்திலே அழுந்துவார்க்கு வந்த ஆபத்தையும், சம்சார
  அர்ணவத்தில் அழுந்துவார்க்கு வரும் ஆபத்தையும் விவரணம்
  செய்கிறார் ‘சரீரத்துக்கு’ என்று தொடங்கி.

7. ‘அபேக்ஷிக்காதவர்களையோ’ என்று தொடங்கி மேலே அருளிச்செய்த
  வாக்கியத்தை விவரணம் செய்கிறார் ‘சரணம்புகாதாரை’ என்று
  தொடங்கி.

8. ‘பாதுகாக்கப்படுகின்ற பொருள்களின் அளவன்றிக்கே’ என்று தொடங்கி
  மேலே அருளிச்செய்த வாக்கியத்தை விவரணம் செய்கிறார் ‘ரக்ஷித்துச்
  சமைந்து’ என்று தொடங்கி.