பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
451

ரக்ஷணத

ரக்ஷணத்தில் கலவாமல் கைவாங்கி இருத்தல் போருமோ? 1பிரளயாபத்தை ரக்ஷித்துப் பின்பும் ‘நாம் இவற்றுக்குச் செய்தது ஒன்று உண்டோ’ என்று உடன் கிடந்தாரை மடிதடவி, பின்னர் ‘என் செய்தோமானோம்’ என்று தபிக்கின்றவர்களைப் போலே இழவுபட்டிருப்பான் ஒருவன் அன்றோ நீ!

    2
பெருவாயா - பாதுகாக்கப்படுகின்ற பொருள்களின் அளவு அல்லாத ரக்ஷகனுடைய பாரிப்பு இருக்கிறபடி. என்றது, 3அவற்றின் பக்கல் உண்டான ரக்ஷணத்தில் பாரிப்போபாதியும் போரும், தம் பக்கல் உபேக்ஷை என்றிருக்கிறர் என்றபடி. பெருவாயா - 4திரௌபதி ‘சரணம்’ என்ற வார்த்தை இத்தனையும் திருவுள்ளத்தே கிடக்க, சபையில் துச்சாதனன் உண்டாக்கின மானபங்கத்தையும் நீக்கி, துரியோதனாதியர்களையும் அழித்து, இவள் கூந்தலையும் முடிப்பித்து, தருமபுத்திரன் தலையில் முடியையும் வைத்துப் பின்பும் 5“வட்டிக்கு வட்டி ஏறின கடனைப்போன்று என் மனத்தினின்றும் நீங்கவில்லை” என்று குறைவாளனாய், பரமபதத்துக்கு எழுந்தருளுகிறபோதும் “நாதிஸ்வஸ்த்தமநா: - நிம்மதியடையாத மனமுடையவனாய்” என்று திருவுள்ளத்தில் புண்ணோடேயன்றோ எழுந்தருளினான்.

 

1. ரக்ஷித்துச் சமைந்து பின்னையும் ‘ஒன்றும் செய்யப்பெற்றிலோம்’
  என்றிருந்த பிரகாரம் யாது? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
  ‘பிரளயாபத்தை’ என்று தொடங்கி. மடிதடவி - மடியிலுண்டான
  பொருளைக் கொள்ளைகொண்டு.

2. ‘ரக்ஷித்துச் சமைந்து’ என்று தொடங்கிக் கூறிய பொருள், “பெருவாயா!”
  என்றதனைக் கடாக்ஷித்து என்னுமிடம் தோற்ற, மீளவும் பதத்தை எடுத்து
  அதற்குப் பொருள் அருளிச்செய்கிறார் “பெருமவாயா!” என்று தொடங்கி.

3. இதனால் பலித்த பொருளை அருளிச்செய்கிறார் ‘அவற்றின் பக்கல்’
  என்று தொடங்கி. பாரிப்போபாதியும் - பாரிப்பைப்போலவும்.

4. ரக்ஷித்த பின்பும் ‘ஒன்றும் செய்யப்பெற்றிலோம்’ என்றிருக்குமென்னுமதனை
  ஒரு திருஷ்டாந்தத்தின் மூலம் காட்டுகிறார் ‘திரௌபதி’ என்று தொடங்கி.
  இதற்காக, மீளவும் பதத்தை எடுக்கிறார் “பெருவாயா!” என்று.

5. “கோவிந்தேதி யதாக்ரந்தத் க்ருஷ்ணா மாம் தூரவாஸிநம்
   ருணம் ப்ரவ்ருத்தமிவ மே ஹ்ருதயாத் நஅபஸர்பதி”

 
என்பது, மஹாபாரதம், உத், 58 : 22.