|
உலப
உலப்பு இல் கீர்த்தி
அம்மானே - 1இவனுக்குக் காக்குந் தன்மை வந்தேறியாய்ப் போய், பழையதுகொண்டு
வளைப்பிடுகிறேன் அல்லேன்; இப்படி உலகத்தைக் காப்பாற்றி ஈட்டிய புகழுக்கு முடிவில்லை என்கிறது.
2பொழில் ஏழும் காவல்பூண்ட புகழே அன்றோ. 3இப் படிகளால் வந்த குணங்களுடைமையால்
வந்த பிரசித்தியையுடைய சர்வேசுவரனே! 4“அந்தப் பரமாத்மாவின் கீர்த்தி பெரியது”
என்றும், 5“கீர்த்திக்குத் தானே இருப்பிடமாக இருப்பவர்” என்றும் உபதேசத்தால்
அறிய வேண்டும்படி அன்றிக்கே, 6“எல்லாராலும் அறியப்பட்டவர்” என்று பகைவர்கள்
கூட்டத்திலும் இப்படிப் பிரசித்தமாய் அன்றோ உன் புகழ் இருப்பது. 7‘பாதகத்தின்
சந்நிதியிலே பாதிக்கப்படும் பொருளும் ஜீவிக்கும்படி அன்றோ உன்னுடைய ஆணை இருப்பது. அவன் நினைத்த
அன்று பாதகந்தானே பாதிக்கப்படுகிற பொருளுக்குப் பால்ஊட்டி வளர்த்தா நிற்குமன்றோ. உலப்பு
இல் கீர்த்தி அம்மானே - 8“குணங்களுக்
1. பிரளய ஆபத்தில்
துணைபுரிந்தமையைக் கூறியபின் “உலப்பில் கீர்த்தி
அம்மானே” என்கிறவருடைய மனோபாவத்தை
அருளிச்செய்கிறார்
‘இவனுக்கு’ என்று தொடங்கி. ‘இப்படி உலகத்தைக் காப்பாற்றி’ என்றது,
ஒரு
காலத்திலே அல்லாமல் எப்பொழுதும் பாதுகாத்து என்றபடி.
2. பாதுகாத்தலால் வந்த
புகழுக்குப் பிரமாணம் காட்டுகிறார் ‘பொழிலேழும்’
என்று தொடங்கி. இது, திருநெடுந்தாண்டகம்,
10.
3. ‘இப்படிகளால்’ என்றது,
மேலே கூறிப்போந்த ஆபத்சகாயனாயிருத்தல்
முதலாயினவற்றால் என்றபடி.
4. அதற்குப் பிரமாணங்கள்
காட்டுகிறார் ‘அந்தப் பரமாத்மாவின்” என்று
தொடங்கி. “தஸ்ய நாம மஹத்யஸ:” என்பது.
5. “யஸஸ: ச ஏகபாஜனம்”
என்பது, ஸ்ரீராமா. கிஷ். 15 : 19.
6. “விதித: ஸஹி தர்மஜ்ஞ:
ஸரணாகத வத்ஸல:” என்பது, ஸ்ரீராமா.
சுந். 21 : 20.
7. ரக்ஷகத்தின் முடிவின் எல்லையைக்
காட்டுகிறார் ‘பாதகத்தின்’ என்று
தொடங்கி. பாதகம் - பெரிய திருவடி. பாதிக்கப்படும்பொருள்
- சுமுகன்.
“பொருதுறைசேர் வேலினாய்
புலிப்போத்தும் புல்வாயும்
ஒருதுறையின் நீருண்ண உலகாண்டோன்
உளன்ஒருவன்”
(கம்பரா. குலமுறை.5.)
“மாதர், அருகூட்டும் பைங்கிளியும்
ஆடற் பருந்தும்
ஒருகூட்டில் வாழ உலகு”
(நளவெண்பா)
என்பன, ஈண்டு ஒருபுடை ஒப்புநோக்கலாகும்.
8. “குணாநாம்
ஆகரோ மஹாந்” என்பது, ஸ்ரீராமா. கிஷ். 15 : 21.
|