பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
453

New Page 1

கெல்லாம் நிலையமாக இருப்பவன்” என்றும், 1“அப்படியே அளவற்றவை இறைவனுடைய குணங்கள்” என்றும், 2“ஸ்ரீ கிருஷ்ணபகவானுடைய கல்யாணகுணங்கள் உலகமெல்லாம் சேர்ந்துகொண்டு பதினாயிரம் வருடங்கள் கூறினாலும் முடிவு பெறுவன அல்ல” என்றும், 3“ஒ அரசனே! உன்னுடைய புதல்வனான ஸ்ரீராமபிரானுக்கு மங்களகரமான குணங்கள் பல இருக்கின்றன” என்றும் சொல்லுகிற குணங்களும் முடிவு இன்றிக்கே இருக்கை. இவற்றை எல்லைகாண நினைத்தால் கரைகண்டு மீள ஒண்ணாது. மதிக்குறைவாலே மீளுமத்தனை.

    நிலவும் சுடர் சூழ் ஒளிமூர்த்தி - 4பாதுகாப்பவன் அன்றிக்கே கொலைஞன் ஆனாலும் விடஒண்ணாத வடிவழகு இருக்கிறபடி. ஒரு கருமம் காரணமாக வந்து அது வற்ற வற்றுவது அன்று ஆதலின் ‘நிலவும்’ என்கிறது. 5உள்ளு மண்பற்றாய்ப் புறம்பு ஒளிஊட்டியிருத்தல் அன்றிக்கே, “ஒளிகளின் திரள்” என்கிறபடியே, ஒளிப்பொருள்களைத் திரட்டிப் பிடித்தாற்போலே இருத்தலின் ‘சுடர்சூழ்’ என்கிறது. இராசத தாமதங்களால் கலந்தது அன்றிக்கே, சுத்தசுத்துவமயமாய் நிரவதிக தேஜோரூபமாய், நெய்திணுங்கினாற்போலே உள்ளும்புறம்பும் ஒக்க ஒளியேயாய் இருக்கையைத் தெரிவித்தபடி.

 

1. “ததா குணா: ஹி அநந்தஸ்ய” என்பது, மாத்ஸபுராணம்.

2. “வர்ஷாயுதை: யஸ்ய குணா ந ஸக்யா:
   வக்தும் ஸமேதைரபி ஸர்வ லோகை:
   மஹாத்மந: ஸங்க சக்ராஹி பாணே:
   விஷ்ணோ: ஜிஷ்ணோ: வஸுதேவாத்மஜஸ்ய”

  என்பது, மஹாபாரதம் கர்ணபர்வம்.

3. “பஹவோ ந்ருப கல்யாணகுணா: புத்ரஸ்ய ஸந்தி தே”

  என்பது, ஸ்ரீராமா. அயோத். 2 : 26.

      “தாவா விழுப்புகழ்” என்று தொல்காப்பியனார் கூறுவதும், “பொருள்
  சேர்புகழ்” என்று திருவள்ளுவர் கூறுவதும், சங்க இலக்கியங்கள் எல்லாம்
  ‘புகழுடையான் இவன் ஒருவனே’ என்று ஒரு முகமாகவே கூறிச்
  செல்லுவதும் இங்கு உளங்கோடல் தகும்.

4. மேல் அடியாலே, ரக்ஷகத்வத்தைச் சொன்னாராதலின் அதுதான்
  இல்லையேயாகிலும் வடிவழகு விடப்போகாது என்கிறார் ‘பாதுகாப்பவன்
  அன்றிக்கே’ என்று தொடங்கி.

5. “சுடர்” என்றும், “ஒளி” என்றும் அருளிச்செய்ததற்குப் பொருள்
  அருளிச்செய்கிறார் ‘உள்ளுமண்பற்று’ என்று தொடங்கி. இதனை
  விவரணம் செய்து பிரமாணமும் காட்டுகிறார் ‘இராசத தாமத’ என்று
  தொடங்கி. ‘உயர்வினையே’ என்பது, திருவாய். 1. 7 : 4.