|
New Page 1
“உயர்வினையே தரும் ஒண்சுடர்க்கற்றை”
என்னக்கடவதன்றோ. 1திருமேனிதன்னைப் “பஞ்ச சக்தி மயம்” என்றும்
சொல்லா நின்றார்கள்; “ஷாட்குண்ய விக்ரஹம்” என்றும் சொல்லா நின்றார்கள்; ஆராய்ந்து
பார்த்தால் பொருளின் நிலைமைதான் “பஞ்சசக்திமயம்” என்றே இருக்கும்; ‘ஷாட்குண்ய
விக்ரஹம்’ என்றது, திருமேனிதான் குணங்களுக்குத் திரோதாயகம் அன்றிக்கே பிரகாசகமாய்
இருக்கையாலே. 2“மன்மதன்போன்ற சுந்தரமான உருவமுடையவர்; கவர்ச்சிகரமான காந்தியுடையவர்”
என்றும் 3“மன்மதனுக்கும் மன்மதனாக இருக்கின்ற அந்தக் கண்ணபிரான் அந்தக் கோபஸ்திரீகளுக்கு
மத்தியில் தோன்றினான்” என்றும் சொல்லுகிறபடியே யன்றோ இருப்பது.
நெடியாய் -
4மேலேகூறிய குணங்களுக்கு எல்லை உண்டானாலும், சௌந்தரியம் லாவண்யம் முதலானவற்றிற்கு
எல்லை காண ஒண்ணாதபடியாயிருக்கை. 5“மஹாந்” என்கிறபடியே, தொட்ட தொட்ட துறைதோறும்
தறை காண ஒண்ணாதிருக்கிறபடி.
1. திருமேனி, சுத்த சத்வமயமாயிருக்கிறது பஞ்சோபநிஷந்மயமாகையாலே
என்று கொண்டு, “ஷாட்குண்யவிக்ரஹம்”
என்று சொல்லா நிற்க,
“பஞ்சோபநிஷந்மயம்” என்று சொல்லுகிறபடி எங்ஙனே? என்கிற
சங்கையைப்
பரிஹரிக்கிறார் ‘திருமேனிதன்னை’ என்று தொடங்கி. பஞ்ச
சக்தியாவன: அப்ராக்ருதங்களான ஐந்து
பூதங்கள். திரோதயகம் -
மறைப்பது.
2. “சுடர், ஒளி” என்னும்
இரண்டனையும், ‘குழிந்தாழ்ந்த கண்’
என்பதுபோன்று மீமிசைச் சொல்லாகக்கொண்டு பொருள்
அருளிச்செய்தார் மேல். இங்கு, வெவ்வேறு சொற்களாகக்கொண்டு, அழகு
என்றும், லாவண்யம் என்றும்
பொருள் அருளிச்செய்கிறார் ‘மன்மதன்
போன்ற’ என்று தொடங்கி.
“ரூபவாந் ஸுபக: ஸ்ரீமாந்
தந்தர்ப்பஇவ மூர்த்திமாந்”
என்பது, ஸ்ரீராமா. சுந். 34 : 30.
3. “தாஸாம் ஆவிரபூத் சௌரி:.
. . . . .ஸாக்ஷாத் மந்மதமந்மத:”
என்பது, ஸ்ரீபாகவதம், 10. 32 : 2.
4. “ஒளிமூர்த்தி” என்றதன்பின்,
“நெடியாய்” என்கையாலே, அழகு
முதலானவற்றிற்கு எல்லை காண ஒண்ணாதவன் என்றுகொண்டு,
“உலப்பில் கீர்த்தி அம்மானே” என்றதனோடே இதற்கு இயைபு
அருளிச்செய்கிறார் ‘மேலே கூறிய’ என்று தொடங்கி.
5. ஆயின்,
ஆத்மகுணங்கள் அளவிற்கு உட்பட்டனவோ? என்ன, அதற்கு
விடை அருளிச்செய்கிறார் ‘“மஹாந்” என்கிறபடியே,
என்று தொடங்கி.
என்றது, “ஜ்ஞானவிஜ்ஞான” (ஸ்ரீராமா. கிஷ். 15 : 20.) என்ற சுலோகத்தில்,
“குணாம்நாம்” என்றதனால், குணங்களையும், “மஹாந்” என்றதனால்,
ஆத்மகுணங்களையும் சொல்லுகிறது
என்றபடி.
|