பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
455

அடியேன் ஆர்உயிரே - 1வடிவழகையும் குணங்களையும் காட்டி, என்னை, உன்னைவிட்டுப் பிரியின் ஜீவியாதபடி செய்தவனே! 2“திருவேங்கடத்து எம்பெருமானே” என்றதனோடு ஒக்க இதனைக் கூட்டக் கடவது. திலதம் உலகுக்கு ஆய்நின்ற - பெண்களுக்கு நிறைந்திருக்கின்ற ஆபரணம்போலே ஆயிற்று பூமிக்குத் திருமலை. திருவேங்கடத்து எம்பெருமானே அடியேன் ஆர் உயிரே - திருமலையில் நின்று என்னுடைய சேஷத்வ முறையை அறிவித்து, உன்னால் அல்லது செல்லாதபடி செய்தவனே! இவ்வளவும் வர, அவனுடைய சொரூபம் சொன்னார்; இனி, தம் சொரூபம் சொல்லுகிறார்: குல தொல் அடியேன் - குலமாகப் பழையதான அடியேன். இதனால் தமக்கு ஓர் உயர்வு சொல்லுகிறார் அல்லர்; தம்முடைய அநந்யகதித்வம் சொல்லுகிறார் 3ஒருவர்க்கேயாய் இருப்பாரை வேறு சிலர் நோக்குதல் இல்லை அன்றோ. உனபாதம் கூடுமாறு கூறாய் - 4சொரூபம் இதுவான பின்பு, சொரூபத்திற்குத் தக்கதான பேற்றினைப் பெறும்படி செய்தருளாய். அடியேன் உனபாதம் கூடுமாறு - 5அடியவன் உன்னைக்கூட என்னுமது ‘உன பாதம்கூட’ என்பதே அன்றோ. உனபாதம் கூடுமாறு - 6இவருடைய சாயுஜ்யம் இருக்கிறபடி. கூறாய் - உனக்கு ஒரு சொல்;

 

1. “உலப்பில் கீர்த்தி” “ஒளிமூர்த்தி” என்பனவற்றைக் கடாக்ஷித்து, பாவம்
  அருளிச்செய்கிறார் ‘வடிவழகையும்’ என்று தொடங்கி.

2. ‘திருவேங்கடத்து எம்பெருமானே’ என்று தொடங்கும் வாக்கியத்துக்குக்
  கருத்து, “அடியேன் ஆருயிரே!” என்பதனை, “திருவேங்கடத்து
  எம்பெருமானே!” என்றதனோடும் கூட்டிப் பொருள்கோடல் வேண்டும்
  என்பது. அநந்யகதித்வம் - வேறுகதி ஒன்றும் இல்லாததன்மை.

3. “குலதொல் அடியேன்” என்றதனால் அநந்யகதித்வம் தோற்றுமோ?
  என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘ஒருவர்க்கேயாய் இருப்பாரை’
  என்று தொடங்கி.

4. “அடியேன்” என்பதனையும் கூட்டிப் பொருள் அருளிச்செய்கிறார்
  ‘சொரூபம் இதுவானபின்பு’ என்று தொடங்கி.

5. உன்னைக்கூடுமாறு என்னாமல், “உனபாதம் கூடுமாறு” என்பான் என்?
  என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘அடியவன்’ என்று தொடங்கி.

6. பெறுமாறு என்னாமல், “கூடுமாறு” என்றதற்கு, பாவம் அருளிச்செய்கிறார்
  ‘இவருடைய’ என்று தொடங்கி. சாயுஜ்யம் - மோக்ஷம்.