பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
457

இருக்கிறதற்கும் என் தீவினைகள் கிடக்கைக்கும் என்ன சேர்த்தி உண்டு? 1தடை இல்லதா சக்தியையுடைய திவ்விய ஆயுதங்களானவை இவனுடைய பாபங்கள் எல்லாவற்றையும் போக்கிக் காப்பாற்றக் கூடியனவாயிருக்கும். 2அவனாலே வருமவற்றையும் போக்கக் கூடியனவாயிருக்கும். “எல்லா ஆபத்துக்களினின்றும் காப்பாற்றுகின்றன” என்னப்படுவன அன்றோ. “ஸகல” என்ற சொல்லுக்குள்ளே இவனும் உண்டே. 3இனித்தான், பாவங்கள், “ஸம்ஸாரங்களில் பாபிகளான மனிதர்களைத் தள்ளுகிறேன்” என்கிறபடியே, இவன் பக்கல் குற்றங்களைக் கண்ட அவனுடைய நிக்கிரஹத்தாலே வருமவை அன்றோ, அங்ஙனே வருமவற்றையும் போக்கக்கூடியனவாயிருக்கும் இவை. அதற்கு அடி, அவன் 4அடியில் செய்த அநுக்கிரஹதையே நினைத்திருக்கையாலே. 5இனித்தான், ‘இவற்றின் தோஷங்களைக்கண்டு நாம் ஒரு காரணம்பற்றிச் சீறின போதும் நீங்கள் கைவிடாமல், நாம் அடியிற்செய்த நம்முடைய இயல்பான அருளைப்பார்த்து நீங்கள் காப்பாற்றுங்கோள்’ என்று அவன் பக்கல் பெற்றுடையர்களாய் இருப்பர்கள் அன்றோ. 6அருளார்

 

1. திவ்விய ஆயுதங்கள் விரோதிகளைப்போக்கிக் காப்பாற்றும் என்பதற்கு,
  “அவ்யாஹதாநி” என்ற சுலோகத்தைத் திருவுளத்தே கொண்டு
  அருளிச்செய்கிறார் ‘தடை இல்லாத’ என்று தொடங்கி. முதல் பத்து
  ஈட்டின் தமிழாக்கம், பக். 134. காண்க.

2. பிறரால் வரும் ஆபத்தை அன்றிக்கே, சர்வேசுவரனால் வரும்
  ஆபத்தையும் போக்கும் என்கிறார் ‘அவனாலே’ என்று தொடங்கி.
  ‘அவனாலே வருமவற்றையும்’ என்பதற்குச் சப்தம் யாது? என்ன, ‘எல்லா
  ஆபத்துக்களினின்றும்’ என்று தொடங்கி அதற்கு விடை
  அருளிச்செய்கிறார். “ரக்ஷந்திஸகல ஆபத்ப்ய:” என்பது விஷ்ணுதர்மம்.
  70.

3. எல்லா ஆத்மாக்களுக்கும் நலத்தையே செய்யும் சர்வேசுவரன்
  ஆபத்தைச் செய்யலாமோ? என்ன, ‘இனித்தான்’ என்று தொடங்கி
  அதற்கு விடை அருளிச்செய்கிறார். “ஸம்ஸாரேஷு நராதமாந். . .க்ஷிபாமி”
  என்பது ஸ்ரீகீதை, 16 : 19.

4. ‘அடியில் செய்த அநுக்கிரஹம்’ என்றது, அடியிலே சேதனரிடத்தில்
  செய்த சுபாவமான கிருபையை என்றபடி.

5. அதற்கே வேறும் ஒரு காரணத்தை அருளிச்செய்கிறார் ‘இனித் தான்’
  என்று தொடங்கி.

6. அவன் சீறினபோதும் ரக்ஷிக்கும்படி இவற்றுக்குக் கிருபை விஞ்சி
  இருக்குமோ? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘அருளார்’
  என்று தொடங்கி. இது, திருவிருத்தம், 33.