பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
528

    அடிக்கீழ் அமர்ந்து புகுந்து அடியீர் வாழ்மின் என்று என்று-1உங்கள் உத்தேசியம் கண்டீர்கோளே, இத் திருவடிகளைப் பற்றி ஆழ்ந்து கிருதக்கிருத்தியராய்ப் போங்கோள் என்று, அருள் கொடுக்கும் 2படிக் கேழ் இல்லாப் பெருமானை - அடியார்கள் விஷயத்தில் அருள்கொடுக்கும் சுபாவத்துக்கு ஒப்பு இல்லாத சர்வேசுவரனை. 3“மாஸுச: - துக்கப்படாதே” என்ற கிருஷ்ணனும் ஒவ்வான் இவன் படிக்கு. பழனம் குருகூர்ச் சடகோபன் - நல்ல நீர் நிலங்களையுடைய திருநகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வார். முடிப்பான் சொன்ன ஆயிரத்துத் திருவேங்கடத்துக்கு இவை பத்தும் - “பல நீ காட்டிப் படுப்பாயோ” என்கிற சம்சார விரோதத்தை முடிக்கையிலே திருவுள்ளத்தாலே உத்சாஹம்கொண்டு அருளிச்செய்த ஆயிரத்திலும் வைத்துக்கொண்டு இப்பத்தும் திருமலைக்குச் சொல்லிற்றின. 4“சுவாமி! இலக்ஷம் பசுவின் விலையை வாங்கிக் கொண்டு சபளை என்கிற காமதேநுவை எனக்குக் கொடுக்க வேண்டும்; இந்தக் காமதேநு பசுக்களில் இரத்தினம் என்பது பிரசித்தம்; தர்மசாத்திரப்படி இரத்தினத்தைக் கொள்ளுகிறவன் அரசன்” என்கிறபடியே.

 

1. அடியவர்கட்கு உத்தேசியம் திருவடிகள் ஆகையாலே ‘உங்கள்
  உத்தேசியம் கண்டீர்கோளே’ என்கிறார். அமர்ந்து - வேறு பயன்களைக்
  கருதாதவர்களாய். கிருதக்கிருத்யர் - செய்யவேண்டிய காரியங்களைச்
  செய்துமுடித்தவர்கள்.

2. படி - சுபாவம். கேழ் - ஒப்பு.

3. “கேழ் இல்லா” என்றது, யாரை நோக்கி? என்ன, அதற்கு விடை
  அருளிச்செய்கிறார் ‘மாசுச:’ என்று தொடங்கி. என்றது,
  கிருஷ்ணனைப்போன்று காலவிசேஷத்திலே அதிகாரியான
  அருச்சுனனுக்கு மாத்திரம் அருள் கொடுக்கை அன்றிக்கே, “அடியீர்”
  என்று கானமும் வானரமு மானார்க்கும், “பின்னானார் வணங்கும் சோதி”
  என்கிறபடியே, எல்லாக் காலத்திலும் எல்லார்க்கும் முகங்கொடுக்கையாலே,
  கிருஷ்ணனும் ஒப்பு அல்லன் என்றபடி. “அருள்கொடுக்கும்” என்ற
  நிகழ்காலத்தாலே எல்லாக் காலமும் கிருபைசெய்வான் என்று
  தோற்றுகிறது. “முக்காலத்தினும் ஒத்தியல் பொருளைச், செப்புவர் நிகழுங்
  காலத்தானே” என்பது இலக்கணம். “அடியீர்” என்ற பன்மையாலே,
  எல்லார்க்கும் திருவருள் புரிதல் பெறுதும்.

4. “இவை” என்றதற்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘சுவாமி’ என்று தொடங்கி.
  என்றது, ‘நல்லன எல்லாம் அரசனுக்குரியன’ என்கிறபடியே, இவற்றினுடைய
  நன்மையாலே, “இவை பத்தும் திருவேங்கடத்துக்கு” என்கிறார் என்றபடி.

  “கவாம் ஸத ஸஹஸ்ரேண தீயதாம் சபளா மம
   ரத்நம் ஹி பகவந் ஏதத் ரத்நஹாரீ ச பார்த்திவ:”

 
என்பது, ஸ்ரீராமா. பால. 53. 9.