பக
பக்கலிலும் ஈசுவரன் பிரசந்நனாம்.
1ஸ்ரீவிபிஷணாழ்வானோடு வந்த நால்வர்க்கும் அவன்செய்த சரணாகதியே அமைந்ததே அன்றோ.
2‘இவன் உடையவன்’ என்று எதிர்த்தலைக்குத் தோற்ற இருக்குமத்தனையே வேண்டுவது.
(11)
திருவாய்மொழி
நூற்றந்தாதி
உலகுய்ய மால்நின்ற உயர்வேங் கடத்தே
அலர்மகளை முன்னிட் டவன்தன் - மலரடியே
வன்சரணாய்ச் சேர்ந்த மகிழ்மாறன் தாளிணையே
உன்சரணாய் நெஞ்சமே உள்.
(60)
ஆறாம்பத்து ஈட்டின்
தமிழாக்கம்
முற்றிற்று.
ஆழ்வார் எம்பெருமானார்
சீயர்-திருவடிகளே அரண்.
நம்பிள்ளை நற்றாள்
வாழ்க.
வடக்குத் திருவீதிப்
பிள்ளை மலரடி வாழ்க.
மாறன் மலரடி வாழ்க.
1. இங்ஙனம்
ஒருவர் சம்பந்தங்கொண்டு ஏனையோரையும் அங்கீகரித்த
இடம் உண்டோ? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘ஸ்ரீ
விபீஷணாழ்வானோடு’ என்று தொடங்கி.
2. ஆழ்வார் செய்த
சரணாகதியே நமக்கு எல்லாம் போதியதாகில், ஞான
அநுஷ்டானங்கள், பஞ்ச சம்ஸ்காராதிகள் வேண்டாவோ?
திருவாய்மொழியை வறிதே கற்றிருக்க அமையுமோ? என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார் ‘இவன் உடையவன்’ என்று தொடங்கி. என்றது,
இந்தப் பாகவதராலே அபிமானிக்கப்பட்டவன் இவன் என்று
எதிர்த்தலையான சர்வேசுவரனுக்குத் தோற்றும்படி வாழ்வதிலே ஞான
அநுஷ்டானங்கள் பஞ்ச சம்ஸ்காராதிகள் எல்லாம் உள்ளடங்கிக்
கிடக்கின்றன என்றபடி.
|