ஸ்ரீ
வியாக்கியானத்தில் வந்துள்ள ஐதிஹ்யங்கள்
இவ்விடத்தே பட்டர்
அருளிச்செய்வது ஒருவார்த்தை உண்டு. அதாவது, “சமஸ்த கல்யாண குணாத்மகனாய் உபய விபூதியுக்தனாய்
ஸர்வாதிகனாய் ஸர்வநியந்தாவாயிருக்கிற சர்வேசுவரன் நான்கு இடைப்பெண்கள் இருந்த இடத்தே
புக்கு அல்லது நிற்கமாட்டாத செல்லாமை விளைய, அவர்கள் ‘நீ இங்குப் புகுராதே கொள்’ என்ன,
விலங்கு இட்டாற்போலே பேரவும் திரியவும் மாட்டாதே தடுமாறி நின்றான் என்கிற சௌசீல்யம்
யார் அறிந்து கொண்டாட வியாசர் முதலாயினோர் எழுதியிட்டு வைத்துப்போனார்களோ?” என்பது.
பக். 126.
இப்பாசுரத்தைச்
சீயர் அருளிச்செய்யாநிற்கச்செய்தே அங்கே இருந்தவரான ஆப்பான் ‘இவர்கள் இவனைக் கடந்து
போனார்களாகிற் செய்வது என்?’ என்று கேட்க, ‘அது யார் காரியம்? பின்னை இரண்டத்தில் ஒன்று
சித்திக்கும் என்றன்றோ அவன்தான் கிடந்தது!’ என்று அருளிச்செய்தார்.
பக். 135.
‘நல்லாரும் நம்பிசேநாபதிதாசரும்
கூடத் திருமலைக்குப் போகா நிற்க, ஸ்ரீ நம்பிசேநாபதிதாசர் ஒரு கோலை இட்டுத் தூற்றை அடிக்க,
நல்லார், அர்த்தகாம நிமித்தமான துவேஷம் இதனோடு இன்றிக்கே இருக்க, ஒரு காரணமும் இல்லாமல்
ஈசுவரனுடைய விபூதியை நலிவதே? என்ற வார்த்தையை நினைப்பது.
பக். 163.
சீயர், இத் திருப்பாசுரத்தை
அருளிச்செய்யப் புக்கால் “நோவ” என்று அருளிச்செய்யும் அழகு காணும். ‘நோவ’ என்கிறார்
காணும் ஆழ்வார், தம் திருமேனியிலே கயிறு உறுத்தினாற்போலே.
பக். 195.
ஒரு தீர்த்தத்தினன்று
ஞாயிறுபோது ஆண்டானும் எம்பாரும் தங்களிலே சந்தித்து, ‘யான் எனது என்னும் செருக்கினால் மலின
|