பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
534

மாக்கப்பட்டவராய் இருப்பார் பத்துக்கோடிபேர் நடுவே, அதி சுகுமாரமான திருமேனியைக் கொண்டு பத்துநாள் எழுந்தருளி, அபாயம் இல்லாமல் புக்கருளப் பெற்றபடி கண்டதே! என்று ஒருவரை ஒருவர் தண்டனிட்டுத் தழுவிக் கொள்ளாநிற்கக் கண்டேன்’ என்று சீயர் அருளிச்செய்வர்.

பக். 213.

    ஆளவந்தார், மணக்கால் நம்பி பக்கல் எம்பெருமானைக் கேட்டவுடனே, ‘உபாயம் இதற்குமேல் இல்லை; இவ்விஷயத்தை இப்போதே நேரே காண்டற்கு விரகு இல்லையோ?’ என்றாராம்.

பக். 239.

    எம்பாரை ‘மரங்களும் இரங்கக்கூடுமோ?’ என்று கேட்க, ‘இது அருளிச்செய்த அன்று தொடங்கி எத்தனை பாவசுத்தி இல்லாதார் வாயிலே புக்கது என்று தெரியாது; இங்ஙனே இருக்கச் செய்தே, இயமம் நியமம் முதலிய யோக உறுப்புக்களாலே பதம் செய்யப் பார்த்தாலும் சுக்கான்பருக்கை போலே நெகிழாதே இருக்கிற நெஞ்சுகளும் இன்று அழிகிறபடி கண்டால் சமகாலத்தில் மரங்கள் இரங்கச் சொல்லவேணுமோ?’ என்று அருளிச்செய்தார்.

பக். 249.

    நஞ்சீயர், ‘பிள்ளை திருநறையூர் அரையரோடே மூன்று திருவாய்மொழி கேட்டேன், அதில் எனக்கு ஒரு வார்த்தையும் போகாது; ஒரு திருவாய்மொழியைச்சொன்ன அளவிலே அவர் சிதிலராய்க் கண்ணும் கண்ணநீருமாய் இருக்கும் இருப்பை நினைத்திருப்பன்’ என்று அருளிச்செய்வர்.

பக். 287.

    அனந்தாழ்வான் சோழகுலாந்தகனிலே பயிர்த்தொழில் செய்து கொண்டிருப்பவனான ஒரு ஸ்ரீ வைஷ்ணவனைக் கண்டு, ‘உம்முடைய ஊர் எது?’ என்று கேட்க, ‘என்னுடைய ஊர் திருக்கோளூர்’ என்ன, ‘அங்கு நின்றும் போந்தது என்? என்ன, ‘தேகயாத்திரை நடவாமே போந்தேன்’ என்ன, ‘அவ்வூரில் கழுதையை மேய்த்து ஜீவிக்க மாட்டிற்றிலையோ? நிலைநின்ற ஜீவனத்தை விட்டுப் போந்தாயே!’ என்றானாம்.

பக். 287.

    எம்பெருமானார் தெற்கே எழுந்தருளாநிற்க, எதிரே வருகின்றாள் ஒரு பெண்பிள்ளையைக் கண்டு ‘எங்கு நின்றும்!’ என்ன, ‘திருக்கோளூரில் நின்றும்’ என்ன, ‘அவ்வூரில் புக்க பெண்களும் போகக் கடவர்களாயிருப்பர்களோ?’ என்று அருளிச்செய்தார்.

பக். 291.