பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
535

    பிள்ளை திருநறையூர் அரையரும் பட்டருமாக உள்ளே பிரதக்ஷணம் செய்யாநிற்க, இட்டஅடி மாறி இடமாட்டாதே கண்களாலே பருகுவாரைப் போலே பார்த்து வாழ்ந்துகொண்டு போகிறபடியைப் பின்னே நின்றுகொண்டு அநுபவித்தேன் என்று நஞ்சீயர் அருளிச்செய்வர்.

பக். 311.

    ஆச்சானும் ஆண்டானுமாகக் கிழக்கே நடக்கிறபோது, திருப்பேர்நகருக்குக் கிழக்குப் போகவும்மாட்டாதே, ஏறித்திருவடி தொழவும் மாட்டாதே, திருப்பேர்நகரான் கோயிலைப் பார்த்துக்கொண்டு இருந்தார்களாம்.

பக். 311.

    ஒருநாள் நம்பிள்ளையை, சீயர், கோஷ்டியிலே வைத்துப் போரக் கொண்டாடியருளி, ‘தன் சிஷ்யனைத் தான் கொண்டாடாநின்றான்’ என்றிராதே கொண்மின்; “கணபுரம் கைதொழும் பிள்ளையைப் பிள்ளை என்று எண்ணப் பெறுவரே” என்று பண்டு சொன்னாரும் உளர் காணுங்கோள் என்று அருளிச்செய்தார்.

பக். 328.

    அம்முணி ஆழ்வான், தன் சிஷ்யனைத் தான் தண்டனிடா நிற்குமாம்; ‘இது என்?’ என்று கேட்க, ‘அல்லாத வைஷ்ணவர்களை ஒழுக்கத்தாலே அறியவேணும்; இவர் நான் அறிய வைஷ்ணவர் என்று ஆதரிப்பன்’ என்றான்.

பக். 328.

    அருளாளப் பெருமாள் எம்பெருமானார் நோவிலே, பிள்ளையுறங்காவில்லிதாசரைக் கொண்டு ஆழ்வான் புக, ‘ஆழ்வான் செய்த நெஞ்சாறல் ஆறுவது ஆளவந்தார் ஸ்ரீபாதத்து ஏறப்போனால் அன்றோ’ என்ற வார்த்தையை நினைப்பது.

பக். 343.

    அருளாளப் பெருமாள் எம்பெருமானாருடைய அந்திமதசையிலே, ‘திருவுள்ளத்திலே ஓடுகிறது என்?’ என்ன, ‘ஒரு பறவை பெருமாளுடைய திருவுள்ளத்தைப் புண்படுத்தியபடி என்? என்று கிடந்தேன்’ என்றார்.

பக். 385.

    வட தேசத்தினின்றும் போரப் பாடவல்லராயிருப்பார் ஒருத்தர் பெருமாளைத் திருவடி தொழவேணும் என்று வர. . .போருமோ செய்த தரம் என்று திருவுள்ளமானார்.

பக். 416.

    பிள்ளானுடைய அந்திமதசையிலே நோவு அறிய நஞ்சீயர் புக்கு இருக்க, “கூவிக்கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ”! என்று பலகால் சொல்ல, இதனைக் கேட்டுச் சீயர் அழ, ‘சீயரே! நீர் கிடந்து அழுகிறது என்? அங்குப் போய்ப் பெறப் புகுகிற பேறு இதிலும் தண்ணிது என்று தோற்றி இருந்ததோ?’ என்று பணித்தான்.

பக். 436.