நஞ
நஞ்சீயரை, நம்பிள்ளை
ஒருநாள் பஞ்சமோபாயம் என்று கொண்டு ஒன்று உண்டு என்று சொல்லுகின்றார்கள்; நாட்டிலேயும் அங்ஙனே
இருப்பது ஒன்று உண்டோ? என்று கேட்டருள, நான் அறிகிலேன்; இனி நான்காவது உபாயந்தான் பகவானேயாயிருக்க,
ஆகாயம் என்று கூறப்படுகிற நாராயணனுக்கும் அப்பால் ஒன்றுண்டு என்று சொல்லுவாரைப் போலே, அவனுக்கும்
அவ்வருகே ஒன்று உண்டு என்கை அன்றோ, அது நான் கேட்டறியேன் என்று அருளிச்செய்தார்.
பக்.
464.
நஞ்சீயர் ஸ்ரீ பாதத்திலே
அடைந்த ஒருவன், ‘எம்பெருமானே உபாயமாகில் சரணாகதிகொண்டு இங்குச் செய்கிறது ஒன்றும் கண்டிலேன்’
என்ன, செவியைப் புதைத்து ‘நாதமுனிகள் தொடங்கி இவ்வளவும் வர நம் ஆசாரியர்கள் பரம ரஹஸ்யமாக
உபதேசித்து, ஓரான்வழியாய்க் கொண்டு போந்த இதனை, இதன் சீர்மை அறியாத உனக்கு மஹாபாபியேன்
இதனை வெளியிடுவதே!’ என்று திருமுடியிலே அடித்துக்கொண்டு திருப்பள்ளி அறையிலே புக்கருளினார்.
பக். 465.
நஞ்சீயர்,
ஒருவனுக்கு, பிறர் துக்கத்தைக் கண்டால் சகிக்க முடியாத தன்மை வந்ததாகில் ‘நமக்குப் பகவத்சம்பந்தம்
உண்டு’ என்று அறுதி இடலாம்; ‘அது தக்கது’ என்றிருந்தானாகில் ‘நமக்குப் பகவத்சம்பந்தம் இல்லை’
என்று தனக்கே கைவாங்க அமையும் என்றருளிச் செய்தார்.
பக். 466.
பட்டர், “நித்தியத்திலே,
‘அமுது செய்யப் பண்ணும்போது தோத்திரத்தை விண்ணப்பம் செய்வது’ என்று இருக்கிறதே, என்ன தோத்திரத்தை
விண்ணப்பம் செய்வது?” என்ன, “‘அடியேன் மேவி அமர்கின்ற அமுதே’, ‘பச்சைமாமலைபோல்மேனி’
என்பன போலே இருக்கும் திருப்பாசுரங்களை விண்ணப்பம் செய்வது” என்றருளிச் செய்தார்.
பக்.
480.
ஒருநாள் பட்டர்,
பிள்ளை அழகிய மணவாள அரையர்க்குத் துவயம் அருளிச்செய்கைக்காக எல்லாரும் செல்லுங்கோள் என்ன,
நஞ்சீயரும் எழுந்து சென்று போய் நம்மை ‘இராய்’ என்றருளிச் செய்திலர் என்று வெறுத்திருக்க,
அப்பொழுதே ‘சீயர் எங்குற்றார்?’ என்று கேட்டருளித் தேடி அழைத்துக் கூட வைத்துக்கொண்டிருந்து
துவயத்தை அருளிச்செய்த வார்த்தை என்று சீயர் அருளிச்செய்வர்.
பக். 491.
|