பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
538

ஸ்ரீ

வியாக்கியானத்தில் வந்துள்ள உவமைகள்.

    வழிபறி உண்டவிடத்தே தாய் முகம் காட்டினாற்போலே.

பக். 10.


    ஒரு கலத்திலே ஒக்க உண்டு ஒரு படுக்கையிலே கிடந்து தூது போவாரைப் போலே.

பக். 29, 131.

    நிருபாதிக பாந்தவ்யமுடையார் பக்கலிலே மனைவி மக்களோடே சென்று ‘சோறு இடும்’ என்று உண்பாரைப் போலே.

பக். 11.

    இராஜ புத்திரர்கள் கையில் இடைச்செறி கடைச்செறிகட்குத் தோற்றிருக்குமாறு போலே.

பக். 13.

    அடுகு வளத்தைத் தடுப்பாரைப் போலே.

பக். 17.

    குற்றம் தேடிச் சொல்லுவாரைப் போலே,

பக். 17.

    உண்ணாநிற்க மிடற்றைப் பிடித்தாற்போலே.

பக். 19.

    உண்டு பசி கெட்டாற்போலே.

பக். 19.

     பிராட்டியைப் பிரிந்து பெருமாள் நோவுபடுகிற சமயத்திலே முதலிகள் அடங்கலும் நாலு திக்குக்களிலும் புகுந்து அங்கும் இங்கும் திரிந்தாற்போலே.

பக். 21.

    ஒரு கலத்திலே ஒக்க உண்டு திரிவாரைப் போலே.

பக். 29, 131.

    சம்சார வெங்காயம் தட்டாதபடி, வைமாநிகர் விமானங்களிலே உயர இருக்குமாறு போலே.

பக். 34, 35.

     பெருமாளும் பிராட்டியுமாகக் காட்டிற்கு ஏகாந்த போகத்துக்குப் போகாநிற்கச்செய்தே நடுவே இராவணன் வந்தாற்போலே.

பக். 35.

    கல்பகதரு பணைத்தாற் போலே.

பக். 45, 487.

    திக்குக்கள்தோறும் முதலிகளைப் போக விடாநிற்கச் செய்தே, திருவடிகையில் திருவாழி மோதிரம் கொடுத்துவிட்டது போலே.

பக். 51.