நம
நம் ஆசாரியர்கள்
வியாபக மந்திரங்கள் மூன்றிலும் துவயத்தையே ஆதரிக்குமாறு போலே.
பக். 52.
மரங்களோடு வசிஷ்டர்
முதலானவர்களோடு வாசியற அழியுமாறு போலே.
பக். 54.
கடலுக்குத் தென்பால்
இருக்கிற பிராட்டியைப் போலே.
பக். 55.
காமினிகளுக்குக்
காமுகர் இனிய பொருளாயிருக்குமாறு போலே.
பக். 57,
59.
மஹாபலியினுடைய
செருக்கினைப்போக்கி ஒன்று ஒழியாமல் கைக்கொண்டாற்போலே.
பக். 58,
259.
‘ஈழம் பிரம்பு
கொண்டது’ என்னுமாறுபோலே.
பக். 58.
அவனும் இழவாளனாய்
யானைக்கு அருள்செய்ய வந்து தோற்றினாற்போலே.
பக். 62.
குடித்தபிறகு எஞ்சியுள்ள
தண்ணீரைப் போன்று.
பக். 64.
மண் தின்று வந்த
நகடுபோல்.
பக். 69.
கடலேறி வடிந்தாற்போலே.
பக். 19,
27,
69.
உதாரர் பக்கலிலே
சென்று தங்கள் தங்கள் பிரயோஜனம் பெற்று உவகையினராமாறு போலே.
69.
சேவகர் நம்மைப்
பரிகசித்துச் சொல்லுமாறு போலே.
பக். 70.
ஊரழி பூசலில் அரண்
உள்ள கோட்டைகளிலே சரக்கு வாங்குவாரைப் போலே.
பக். 73.
அசுரத்தன்மை வாய்ந்தவர்களாய்
உகவாத இரணியன் முதலானோர் கோஷ்டிகளில் திருநாமம் சொல்லுகை பொறுக்க முடியாதவாறு
இருப்பதுபோன்று.
பக். 74.
அம்புப் படுக்கையில்
படுத்திருப்பவரான ஸ்ரீ வீடுமர்க்கு முற்பாடராய் உதவவேண்டியிருக்கப் பிற்பாடரானோம் என்று நோவு
பட்டாற்போலே.
பக். 76.
சேர்ந்து
குளிர்ந்த தண்ணீர் அண்மையிலிருக்க, பெருவிடாயனானவன் அழிஞ்சுக்காடு ஏறப் போகமாட்டாதவனைப்
போலே.
பக். 78.
|