பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
540

    இருட்டு அறைகளிலே தடவிக்கொண்டு வாரா நின்றால் உறியும் வெண்ணெயும் கையிலே தாக்கினால் உவகையனாமாறு போலே.

பக். 81.

    சிங்கம் கிடந்த முழஞ்சு போலே.

பக். 92.

    “உயிரை வைத்துப் போம்” என்பாரைப்போலே.

பக். 95.

    சர்ப்பயாகத்தில் சர்ப்பங்கள் வந்து விழுமாறு போலே.

பக். 103, 330.

    பழையாரைப் பெற்றாற்போல்.

பக். 109.

    நவப்பிரியைகளை விரும்புவாரைப் போலே.

பக். 112.

    கொம்பை யிழந்த தளிர் போலே.

பக். 121.

    குளப் படியிலே கடலை மடுத்தாற்போலே.

பக். 125.

    நீரும் நீரும் கலந்தாற்போலே.

பக். 127.

    இராமாவதாரத்தில் எல்லாக் காரியங்களையும் வில்லைக் கொண்டே செய்யுமாறு போலே.

பக். 134, 188.

    ஒவ்வொரு கலகத்திலே அமர்ந்த நிலங்களிலே குடிவாங்கிப் பின்பு தெளிந்தவாறே தம் தம் இடங்களிலே புகுந்து, விட்ட காரியங்களிலே அதிகரிப்பாரைப் போலே.

பக். 136.

    ஒரு தேச விசேடத்திலே முக்தர் சம்சாரிகளோடு உறவு அற்று இருக்குமாறு போன்று.

பக். 140.

    ஜன்னி ஜுரத்தாலே பீடிக்கப்பட்டவர்களைப் போலே.

பக். 142.

    அடியவர்களுக்குத் திருவடிகள் உத்தேசியமாமாறு போன்று.

பக். 142.

    இராசாக்கள் சிலர் தந் தாம் பகைவர்களை அழித்து வீர அபிடேகமும், விஜய அபிடேகமும் பண்ணி நிற்குமாறு போலே.

பக். 145.

    வல்லார் ஆடினாற்போலே.

பக். 150

    ஒருவனை அகப்படுத்த நினைத்தார் ஊரை வளையுமாறு போலே.

பக். 160.

    மருபூமியிலே பொய்கை கண்டாற்போலே.

பக். 160.

    பஞ்சகாலத்திலே குழந்தைகளை விற்று உண்ணும் தமப்பனைப் போல்.

பக். 175.