வளர
வளர்த்துக்
கொள்ளியான தாயைப்போல்.
பக். 175,
314.
நான் காட்டப்புகுவது
ஓர் ஆச்சரியத்தைப் பாருங்கோள் என்பாரைப் போலே.
பக். 179.
‘பரநிலையும்கூட வேண்டேன்’
என்ற திருவடியைப் போலே.
பக். 180.
நெருப்பை உருக்கி ஏறட்டினாற்போலே.
பக். 186,
307,
308.
சக்கரவர்த்தித்
திருமகனுக்கு வில் கைவந்திருக்குமாறு போலே
பக். 134,
188.
அமிருதத்தைப் பெய்தாற்போலே.
பக். 188.
புழுக் குறித்தது
எழுத்தானாற் போலே.
பக். 191.
ஒருமத்த யானையைத்
தறியோடே சேர்த்தாற் போலே.
பக். 195.
தான் உயிர்பெற
உண்ணுமாறு போலே.
பக். 196.
குழந்தை கிணற்றிலே
விழுந்தால் எடுக்க வரும் தாய் நெஞ்சு நொந்து வந்து எடுக்குமாறு போலே.
பக். 203.
தாயானவள், குழந்தையை
நலிந்தவர்களைத் தான் நலிந்து தன் சினம் தீருமாறுபோலே.
பக். 204.
தேஹாத்மாபிமாநிகளாய்
இருப்பார்க்கு எத்தனையேனும் அறிவு பிறந்தாலும் ‘நான் பருத்தவன், நான் இளைத்தவன்’ என்கிற நிலைமாற்றப்
போகாதவாறு போலே.
பக். 219.
குடிக்கிற தண்ணீர்
விக்கி அது தானே பரவசமாந்தன்மையை விளைப்பிக்குமாறு போலே.
பக். 220.
கன்றைக் கடக்கக்
கட்டிவைத்தால் முலைக் கண் கடுத்துப் பசு அலமந்து படுமாறு போலே.
பக். 228.
பெருவெள்ளத்தில்
சுழிக்குமாறு போலே.
பக். 228.
‘இவ்விடம்
பிள்ளை கொல்லி’ என்று கூப்பிடுமாறு போலே.
பக். 229.
பெருவெள்ளத்தில்
கரையானது நெகிழ்ந்து ஒட்டுவிட்டு ஒசிந்து பொசிந்து அவயவி ஆகாதபடி கரைந்து போமாறு போலே.
பக்.
231.
விரஜைக்கு
அக்கரை என்னுமாறு போலே.
பக். 246.
|