பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
542

New Page 1

    கோயிலுள்ளார் “கோயில்” என்றும், “பெருமாள்” என்றும் கற்குமாறு போலே.

பக். 251.

    பசியன், சோறு தாழ்த்தால் படுமாறுபோலே.

பக். 253.

    சர்வேசுவரன் இதர சஜாதீயனாய் அவதரித்தாற்போலே.

பக். 255.

    பெருமாளும் பிராட்டியும் சேர இருக்க இளையபெருமாள் அடிமைசெய்தாற் போலே.

பக். 255.

    ஒவ்வொரு நகரம் பத்தநம் முதலானவைகள் வேவப் புக்கால், ஒரு மாடம் முறிந்தது, மாளிகை முறிந்தது என்பாரைப் போலே.

பக். 256.

    மஹாபலியை வடிவைக் காட்டி அபகரித்தாற் போலே.

பக். 58, 259.

    பங்களப்படைகொண்டு, தனிவீரம் செய்வாரை அழிக்குமாறு போலே.

பக். 260.

    பிரஹ்மாஸ்திரத்தைக் கொண்டிருந்தும் பட்டுக் கிடப்பாரைப் போலே.

பக். 270.

    நிலவோடும் நக்ஷத்திர தாராகணங்களோடும் கூட சந்திரன் குடிவாங்கின ஆகாசம்போலே.

பக். 282.

    விரகத்தாலே கொதித்துப் புறப்படும் துக்கக் கண்ணீர் போல்.

பக். 287.

    தெய்வம் ஏறினவரைப் போலே.

பக். 287.

    பூ அலரும் போதைச் செவ்வி போலே.

பக். 289.

    காட்டுத்தீயிலே அகப்பட்டவன் பொய்கையும் பொழிலும் தேடிப் புகுமாறு போலே.

பக். 291.

    சம்சாரமாகிற பாலை நிலத்தில் காட்டுத்தீயிலே அகப்பட்டவனுக்கு உகந்தருளின நிலங்களானவை பொய்கையும் பொழிலும் போலே.

பக். 291.

    அவன் அங்குள்ளாரைத் தன்னோடு ஒத்தவர்களாயிருக்கும்படி செய்தாற்போலே.

பக். 293.

    பகவத் பக்திக்கு மேட்டுமடையான சம்சாரத்திலே ஈசுவர அவதாரம்போலே.

பக். 293.

    அகப்பட்டதொரு சிறிய கல்லை இடறுமாறு போலே.

பக். 294.