பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
543

New Page 1

    பெருவெள்ளமானது, சிறிய கரைகளோடு பெரிய கரைகளோடு வாசி அற ஏறுமாறு போலே.

பக். 294.

    கோல் தேடி ஓடும் கொழுந்ததே போன்று.

பக்: 296.

    ஸ்ரீ பரதாழ்வானுடைய ராஜ்யதரிசனம் அவனுக்குப் பொறுக்க முடியாமற் போனதுபோலே,

பக். 299.

    சந்தியாவந்தனத்துக்குப் பிற்பட்டாரைப் பெரியோர்கள் பழிக்குமாறு போலே.

பக். 299.

    தான் பற்றியிருக்கும் பொருள்களை அழிக்கும் நெருப்புப் போலே.

பக். 307, 308.

    திவ்யாத்ம சொரூபத்துக்குப் பிரகாசகமான திவ்விய மங்கள விக்கிரஹம் போலே.

பக். 310.

    இட்ட அடி மாறி இடமாட்டாதே கண்களாலே பருகுவாரைப் போலே.

பக். 311.

    ஓர் ஆபரணம் தானே எல்லா ஆபரணங்களுக்கும் நிறம் கொடுக்குமாறு போலே.

பக். 315.

    கிண்ணகத்தில் இளகின கரைபோலே.

பக். 317.

    வண்டாலே எடுக்கப்பட்ட சாரத்தையுடைய பூப் போலே.

பக். 323.

    சிறை உறவு போலே.

பக். 330.

    பன்னிரண்டு ஆண்டு தண்ணீர்த்துரும்பு அறக் கலந்து பிரிந்த பிராட்டியைப் போலே.

பக். 339.

    பாண்டவர்களுக்குத் தூதுபோன கிருஷ்ணன் படியும், ஆளவந்தார்க்குப் பச்சை இட்ட மணக்கால் நம்பி படியும் போலே.

பக். 347.

    பிராட்டியைக் கண்டு பின்பு முதலிகள் வந்து பெருமாளை உகப்பித்தாற்போலவும், பெருமாள் மீண்டு எழுந்தருளுகிறபோது திருவடி முன்னே வந்து ஸ்ரீ பரதாழ்வானை உகப்பித்தாற்போலவும்.

பக். 364.

    காரியம் செய்து சமைந்தால் கைக்கூலி கொடுப்பாரைப் போலே.

பக். 367.

    வியசனத்துக்கு உரியவர்கள் இருக்க, வேறே சிலர் வார்த்தை சொல்லுமாறு போலே.

378.