பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
544

பட

    பட்டம் கட்டின யானையிலே ஏறிக் காதலியைக் கிட்டும் இராஜபுத்திரனைப் போலே.

பக். 380.

    ஒரு பூ, ஒரு பூவினைப் பூத்தாற்போலே.

பக். 387.

    மகாராஜருடைய இடரைப் பெருமாள் வினவிக்கொண்டு சென்று தீர்த்தாற் போலே.

பக். 396.

    மனைவி புத்திரர்கள் முதலாயினார்களோடே கூடப் பிறர் காரியம் செய்ய ஒருப்பட்டிருப்பாரைப் போலே.

பக். 397.

    மந்திரங்களை இருடிகள் காணுமாறு போலே.

பக். 401.

    பிராட்டி சிறை இருந்தமைக்குக் காரணம் சொல்லப் போகாதவாறு போலே.

பக். 404.

    அவள் இருப்பு பிறர்மேல் வைத்த திருவருளாலே ஆனாற் போலே.

பக். 404.

    அவள் சிறையிருந்தபடியை ஸ்ரீ வால்மீகி பகவான் எழுதிவைக்க இன்று நாடெல்லாம் வாழுமாறு போலே.

பக். 404.

    குலாலனானவன் மண்ணும் நீரும் செதுகும் கூட்டிச் சேரத்துகைத்துக் குடம் முதலானபொருள்களாய்க்கொண்டு தோற்றுவிக்குமாறு போலே.

பக். 408.

    விடாயர் ‘ஒருகால் நாக்கு நனைக்கத் துளி தண்ணீர்’ என்னுமாறு போலே.

பக். 410.

    மானாவிச் சோலை போலே.

பக். 410

    ஒரு பாட்டம் மழை விழுந்தால் பொருள்கள் எல்லாம் செவ்வி பெறுமாறு போலே.

பக். 412.

    காட்டாறு பெருகினாற் போலே,

பக். 415

    குருடர்களுக்கு முன்னே நடக்குமாறு போலே.

பக். 415.

    தண்ணீர் குடிக்கக் கல்லின ஏரியிலே தலைகீழதாக விழுந்து சாவாரைப் போலே.

பக். 416, 469.

    ஒரு கடல் ஒரு கடலோடே பொறாமைகொண்டு கிடந்தாற் போலே.

பக். 417.

    நெருப்பு எரியாநின்றால் கிட்டப் போகாதவாறு போலே.

பக். 417.

    நிதி நோக்குவாரைப்போலே.

பக். 419.