பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
545

    தாயும் தமப்பனும்கூட இருக்கக் கிட்டப்பெறாதே, பால் குடிக்கும் குழந்தை நாக்கு ஒட்டிக் கிடந்து துடிக்குமாறு போலே

பக். 419.

    சிற்றின்பத்திலே ஈடுபாடுடைய ஒருவன் ‘தாய்முகத்திலே விழியேன்’ என்றால், தான் மறைய நின்று அவன் உகந்தாரைக் கொண்டு ரக்ஷிக்கும் தாயைப் போலே.

பக். 425.

    அசுணமா என்று சில பறவைகள் உள்ளன. . . . . .அவை போலே.

பக். 435.

    இரைபெறாத பாம்பு போலே.

பக். 459.

    நீரிலே நெருப்பு எழுந்தாற்போலே.

பக். 460.

    மது விரதம் போலே.

பக். 463.

    காலாக்நி கவடுவிட்டாற் போன்று.

பக். 468.

    உபாத்தியாயர்கள் பெண்பிள்ளைகளுக்குச் செவி ஏற்றாலே ஓத்துப்போயிருக்குமாறு போலே.

பக். 470.

    அசோகவனத்திலே இருந்த பிராட்டியைப் போலே.

பக். 472.

    கிண்ணகத்தில் இழிவாரைப் போலே.

பக். 477.

    சாதனத்தைக் கண்ணழிவு அறச் செய்து பலம் தாழ்ப்பாரைப் போலே.

பக். 480.

    அடக்கம் இல்லாமல் செருக்குக்கொண்டு திரியும் பிள்ளைகள் தலைகளிலே ஸ்ரீ பாததீர்த்தம் கொண்டு தெளிப்பாரைப் போலே.

பக். 484.

    பரி்மளந்தான் ஒருவடிவு கொண்டாற் போலே.

பக். 490, 515.

    ஒளி ஒளியையுடைய பொருளுக்குச் சேஷமாய் நின்றே அத்தலைக்கு நிறங்கொடுக்குமாறு போலே. வாசனை மலருக்குச் சேஷமாய் நின்று பெருவிலையனாக்குமாறு போலே. ஈசுவரன் சுவாதந்திரியம் குலையாமலே பரதந்திரனாமாறு போலே.

பக். 513.

    அவன் உபாயமாமிடத்தில் அங்கத்தைச் சஹியாத சுணையுடைமை போன்று.

பக். 513.

    ஸ்ரீ ஜனகராஜன் திருமகள் பெருமாளைக் கைப்பிடித்த பின்பு ஸ்ரீ மிதிலையை நினையாதவாறு போலே.

பக். 516.

    இருட்டு அறையிலே விளக்குப் போலே.

பக். 519.