இத
இத்தலையைப் பிரிந்து
வந்த சிறாம்புதல் எல்லாம் வடிவிலே தோற்ற நின்றபடி. அகல் ஞாலம் கொண்டவன் கள்வன் அடிமேல்-பூமிப்
பரப்பு அடங்கலும் அவனுக்கு ஒன்றும் தொங்காதபடி அபஹரித்த மஹாவஞ்சகன் திருவடிகளிலே. 1மின்னிடை
மடவார்க்குக் கிழக்கு வெளுக்கிறபடி. 2அதாவது மஹாபலியினுடைய செருக்கினைப்
போக்கி ஒன்று ஒழியாமல் கைக்கொண்டாற்போலே, பிரணயரோஷத்தாலே வந்த இவளுடைய அபிமானத்தைப்
போக்கிச் சேரவிட்டுக் கொண்டபடி. 3எதிரியாய் வந்தவனுடைய செருக்கினைப்
போக்கினாற் போலே அன்று, காதலியுடைய மானம். 4அது அழிக்கலாம், இது அழிக்க ஒண்ணாதே.
5விஷயமில்லாமலே கோபிக்கின்றவர்கள் இலக்குப் பெற்றால் மிகைப்பர்களத்தனையன்றோ.
அவன் சந்நிதியிலும் அழியாதது ஒன்றேயன்றோ இது.
பண் கொள் ஆயிரத்துள்
இவை பத்தும் திருவண்வண்டூர்க்கு - 5‘ஈழம் பிரம்புகொண்டது’ என்னுமாறு
போலே பண்ணே மிக்கிருத்தலின் ‘பண்கொள் ஆயிரம்’ என்கிறது. இன்கொள் பாடல் வல்லார்
- இனிதான பாடல் வல்லார். இதற்குப் பலம் சொல்ல வேண்டாகாணும்; இதனையே இனிதாகச் சொல்ல
அமையும். மின்னிடை
1. அடுத்தது “மின்னிடைமடவார்”
என்ற திருவாய்மொழியாக இருக்க, இங்கு
“வன்கள்வன்” என்கிறதற்குக் கருத்து அருளிச்செய்கிறார்
‘மின்னிடை
மடவார்க்கு’ என்று தொடங்கி.
2. “அகல் ஞாலம்
கொண்ட” என்கிற இது, இவளுடைய துர்மானத்தைப்
போக்கி இவளோடே கலந்தமைக்கு ஓர் அடையாளம்
என்கிறார் ‘அதாவது’
என்று தொடங்கி.
3. ஒரு பெண்ணினுடைய
துர்மானத்தைப் போக்கினதற்கு, எதிரியினுடைய
அபிமானத்தைப் போக்கினது திருஷ்டாந்தம் ஆகமாட்டாதே?
என்ன,
‘அதிலும் அதிகம்’ என்கிறார் ‘எதிரியாய்’ என்று தொடங்கி.
4. இது அதிகமானபடி
எங்ஙனே? என்ன, ‘அது அழிக்கலாம்’ என்று தொடங்கி
அதற்கு விடை அருளிச்செய்கிறார்.
5. அழிக்க ஒண்ணாது
என்கிறது என்? முகம் காட்டினால் அபிமானம்
அழியாதோ? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
‘விஷயமில்லாமலே’ என்று தொடங்கி. என்றது, பிரணய ரோஷத்தினுடைய
ஆரம்ப நிலையிலேயே அதனைப்
போக்கினால் போக்கலாம்; அது
முற்றுமேயாயின், முகம் காட்டினாலும் போகாது அதிகரிக்கும் என்றபடி.
அதனை விவரணம் செய்கிறார் ‘அவன் சந்நிதியிலும்’ என்று தொடங்கி.
6. ஈழம் -
ஈழதேசம். பிரம்பு கொண்டது - பிரம்பு மிகுந்தது.
|