மடவ
மடவார்க்கு மதனர் -
1காமினிகளுக்குக் காமுகர் எவ்வளவு, ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு அவ்வளவு ஆவர் இதனைக் கற்கவல்லவர்கள்.
2இங்ஙன் அன்றாகில், “பல நீ காட்டிப் படுப்பாயோ”, “புறத்திட்டு இன்னம் கெடுப்பாயோ”
என்று சொல்லுகிற இவர், பெண்களுக்குஇனியராவர் என்கிறாரன்றே. ஆதலால், காமினிகளுக்குக் காமுகரைப்
போலே 3அபிமதவிஷயத்திற்கு இனியராவர் என்கிறார். 4திருவடியைச்
சொல்லப்புக்குத் தாமரையைச் சொல்லாநின்றதன்றோ. எல்லாவகையிலும் ஒத்திருப்பனவற்றிற்கு
உபமானத்தையே சொல்லக்கடவது. ‘அதுபோல’ என்றும், ‘அதுதான்’ என்றும் சொல்லக்கடவதாயிருக்கும்.
(11)
திருவாய்மொழி
நூற்றந்தாதி
5வைகல்திரு
வண்வண்டூர் வைகு மிராமனுக்கென்
செய்கைதனைப் புள்ளினங்காள்
செப்புமெனக் - கைகழிந்த
காதலுடன் தூதுவிடும்
காரிமா றன்கழலே
மேதினியீர்! நீர்வணங்கு மின்.
(51)
ஆழ்வார் எம்பெருமானார்
சீயர் திருவடிகளே அரண்.
1. அவதாரிகையில்
அருளிச்செய்ததற்குத் தகுதியாகப் பொருள்
அருளிச்செய்கிறார் ‘காமினிகளுக்கு’ என்று தொடங்கி.
2. இருந்தபடியே
பொருள் கூறினாலோ? எனின், அதற்கு விடை
அருளிச்செய்கிறார் ‘இங்ஙன் அன்றாகில்’ என்று தொடங்கி.
‘என்கிறார்
அன்றே’ என்றது, பெண்களுக்கு இனியராவர் என்கிறார்
என்னக்கூடாதேயன்றோ என்றபடி.
“பல நீ காட்டி” இது, திருவாய்.
6. 9 : 9.
“புறத்திட்டு” இது,
திருவாய். 6. 9 : 8.
3. ‘அபிமத விஷயத்திற்கு’
என்றது, சர்வேசுவரனுக்கும் ஸ்ரீ
வைஷ்ணவர்களுக்கும் என்றபடி.
4. ‘திருவடியைச்
சொல்லப் புக்குத் தாமரையைச் சொல்லாநின்றது’ என்றது,
“தாவி வையம்கொண்ட தடம் தாமரைகட்கே”
(6. 9 : 9.) என்றதனைத்
திருவுள்ளம்பற்றி. இதனை, உருவகம் என்பர் பிற்காலத்தார். ஆசிரியர்
தொல்காப்பியனார் உவமை என்றே கூறுவர்.
5. இங்கு, “வைகல்
திரு” என்ற சீரில் இரண்டாமசையிலுள்ள ஒற்றெழுத்தினை
நீக்கி, அதனைக் கூவிளங்காய்ச் சீராகக்
கொள்க. ஒற்றெழுத்தினை
நீக்காவிடின், கனிச் சீராகும். வெண்பாவினுள் கனிச் சீர்வாராது.
செந்தடையும்
வண்டுறைதார்ச் செய்யாள் வளர்மார்பன்
கந்தடையும்
வேழக் கடைத்தலைவாய் - வந்தடைந்த
பூவேந்தர்
தங்கள்கிளை பொன்னகரில் ஈண்டிற்றே
கோவேந்தன்
மாதைக் குறித்து.
(நளவெண்பா.)
என்னும் செய்யுளின் மூன்றாமடியில்
இரண்டாம் சீர் இங்ஙனமே
வந்திருத்தல் காண்க.
|