இரண
இரண்டாந்திருவாய்மொழி
- “மின்னிடை மடவார்”
முன்னுரை
1இவ்
வாழ்வாராகிறார் சம்சார பயத்தாலும், பகவானிடத்துள்ள ஈடுபாட்டினாலும், கைங்கர்ய ருசியாலும்,
பிரிவில் தரியாமையாலும் பகவத் விஷயத்தில் கைவைத்தார் எல்லாருடைய படிகளையுமுடையராயிருப்பர்.
2“பொய்ந்நின்ற ஞானமும் பொல்லாஒழுக்கும் அழுக்குடம்பும்” என்கையாலே பத்தர்படி
உண்டு என்னவுமாயிருந்தது; 3“இந் நின்ற நீர்மை இனி யாம் உறாமை” என்று கொண்டு,
அது பொருந்தாதபடி இருக்கையாலே முமுக்ஷூக்கள் படியுமாயிருந்தது; 4“வழுவிலா அடிமை செய்யவேண்டும்
நாம்” என்று, கைங்கர்யத்தால் அல்லது தேகயாத்திரை செல்லாமையாலே முத்தர்படி உண்டு
1. மேல் திருவாய்மொழியில்
விடுத்த தூதர் சென்று அவனுக்கு அறிவித்து
அவனும் வாராநிற்க, வருமளவும் பற்றாமல் ஆற்றாமை முறுகி
பிரணயரோஷம் தலையெடுத்து, அதனாலே, ‘இனி அவன் வந்தாலும்
அவனோடே கலப்போம் அல்லோம்’ என்று
இருக்கிற இவளை, அவனும்
வந்து, தன் அழகு முதலியவைகளால் இவளுடைய ஊடலைத் தீர்த்துக்
கலந்த
படியைச் சொல்லுகிறது என்று, மேல் சொல்லப் போகிற சங்கதியைத்
திருவுள்ளம்பற்றி, பிரணயரோஷத்தாலே
ஊடுகின்றவர்கள் பிராட்டிமார்
அலரோ, ஆழ்வார்க்கு இது கூடுமோ? என்ன, ‘இவர்க்கு எல்லார்படிகளும்
உண்டு, ஆகையாலே கூடும்’ என்கிறார் ‘இவ்வாழ்வார் ஆகிறார்’ என்று
தொடங்கி. ‘எல்லாருடைய’
என்றது, முமுக்ஷூக்கள் முத்தர் நித்தியர்
பிராட்டிமார் எல்லாரையும் குறித்தது.
2. சம்சாரபயம் தொடக்கமான
தன்மைகளை, முமுக்ஷூக்கள் முதலானார்
பக்கலிலே இவர் பாசுரங்களாலே காட்டுவதாகத் திருவுள்ளம்பற்றி,
சம்சார
பயம் பிறப்பது, பண்டு சம்சாரியாக இருந்து பகவானை அடைந்தவனுக்கே
ஆகையாலே, பிராசங்கிகமாக,
பத்தர்படியும் உண்டு என்னுமதனை இவர்
பாசுரத்தாலே காட்டுகிறார் ‘பொய்ந்நின்ற’ என்று தொடங்கி.
பத்தர் -
சம்சாரத்திலே கட்டுப்பட்டவர்கள். ‘பொய்ந்நின்ற’ என்றது, திருவிருத்தம்,
பா.
1.
3. முமுக்ஷூக்களுடைய
சம்சார பயம் இவர்க்கு உண்டு என்கிறார் ‘இந்நின்ற’
என்று தொடங்கி.
4. முக்தர்களுடைய
கைங்கர்ய ருசியும் உண்டு என்பதனைக் காட்டுகிறார்
‘வழுவிலா’ என்று தொடங்கி. இது, திருவாய்.
3. 3 : 1.
|