பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
ஆறாம் தொகுதி
 
61

என

என்னலாயிருந்தது; 1“நின்னலால் இலேன்காண்” என்று, அதுதான் ஆத்ம ஸ்வரூபத்தைப் பற்றி வந்ததாயிருக்கையாலே நித்தியரோடு ஒக்கச் சொல்லலாயிருந்தது; 2பிரணயரோஷத்தாலே ஊடுகையாலே பிராட்டிமாரோடு ஒக்கச் சொல்லலாயிருந்தது. 3“ஆற்றலில் விஷ்ணுவை ஒத்தவர், பிரியமாகப் பார்க்கப்படுவதில் சந்திரனை ஒத்தவர்” என்று, பெருமாளுடைய ஒவ்வொரு தன்மைக்கு ஒவ்வொரு பொருளை ஒப்பாகச்சொல்லுமாறு போலே, அல்லாதார்படி அடங்கலும் இவருடைய ஒவ்வொரு நிலைக்கு ஒப்பாமத்தனை. 4இதுதான் இவர்க்கு இளமை தொடங்கியே இருப்பது ஒன்றே யன்றோ. “முலையோ முழு முற்றும் போந்தில. . . . . .பெருமான் மலையோ திருவேங்கடமென்று கற்கின்ற வாசகமே” என்றும், “அறியாக் காலத்துள்ளே அடிமைக்கண் அன்பு செய்வித்து” என்றும் சொல்லுகிறபடியே யன்றோ இவர் பருவம் நிரம்புவதற்கு முன்னும் இருக்கிறபடி.

    5
இனி, “ஏறாளும் இறையோனும்” என்ற திருவாய்மொழியிலே, அவன் வேண்டாத நானும் என்னுடைமையும் வேண்டா என்றார்; “மாசறு சோதி” என்ற திருவாய்மொழியிலே, எனக்கு உறுப்பு அல்லாத அவனும் அவன் விபூதியும் வேண்டா என்று அழிக்கப்

 

1. பிரிவில், நித்தியருடைய தரியாமையும் உண்டு என்னுமதனைக் காட்டுகிறார்
  ‘நின்னலால்’ என்று தொடங்கி. இது, திருவாய். 2. 3 : 7.

2. பிராட்டிமாருடைய பகவத் பிராவண்யமும் இவர்க்கு உண்டு என்னுமதனைக்
  காட்டுகிறார் ‘பிரணயரோஷத்தாலே’ என்று தொடங்கி.

3. ஒருவருக்கே பலருடைய தன்மைகள் உண்டாகக் கூடுமோ? என்ன, அதற்கு
  விடை அருளிச்செய்கிறார் ‘ஆற்றலில்’ என்று தொடங்கி.

  “விஷ்ணுநா ஸத்ரிஸோ வீர்யே ஸோமவத் ப்ரியதர்ஸந:”

  என்பது, ஸ்ரீராமா. பால. 1 : 18.

4. மேலே கூறப்பட்ட தன்மைகள் மற்றைய ஆழ்வார்களுக்கும் உண்டே?
  இவர்க்கு வாசி யாது? என்ன, ‘இதுதான்’ என்று தொடங்கி அதற்கு விடை
  அருளிச்செய்கிறார். “முலையோ” திருவிருத்தம், பா. 60. “அறியாக்காலம்”
  திருவாய். 2. 3: 3.

5. இப்படி, ஊடுகைக்கு யோக்கியதையை உறுதிசெய்து, பிராசங்கிகமாக வந்த
  வினாக்களுக்கு விடைகளும் அருளிச்செய்தார் இதுகாறும். இனி,
  “ஏறாளுமிறையோனும்” என்ற திருவாய்மொழி தொடங்கிப் பிரிவின்
  வியசனம் ஆகையாலே ஊடுகிறாள் என்று, மேல் திருவாய்மொழியோடு
  இத் திருவாய்மொழிக்குச் சங்கதி அருளிச்செய்கிறார் ‘இனி ஏறாளும்’
  என்று தொடங்கி.